பக்கம்:பாலும் பாவையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 'அம்மா..!" அவள் சட்டென்று அழுகையை நிறுத்தி, கண்களை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டு தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள்! உடனே கனகலிங்கத்தின் பார்வை அவள் கழுத்தின்மேல் விழுந்தது. அவன் எதிர்பார்த்தபடி அவளுடைய கழுத்தில் தாலி இல்லாமற் போகவில்லை; இருந்தது! 'அப்படியானால் கணவன் எங்கே?-வெளியே போயிருப்பானோ?-தான் இவளைத் துக்கம் விசாரிக்கப்போய், திடீரென்று அவன் வந்து சேர்ந்து, அதன் காரணமாக ஏதாவது விபரீதம் ஏற்பட்டால்...? கனகலிங்கம் திரும்பினான். "நில்லுங்கள்!-ஐயா, நில்லுங்கள்!” என்றாள் அந்தப் பெண். நின்றான். “உள்ளே வாருங்கள்!” என்றாள். உள்ளே சென்றான். "உட்காருங்கள்!” என்றாள். உட்கார்ந்தான்! இத்தனைக்கும் அந்தப் பெண் அப்போது மகுடி வாசித்துக் கொண்டிருக்கவில்லை; கனகலிங்கம் பாம்பாக உருமாறி அதற்குக் கட்டுப்பட்டிருக்கவில்லை. நடந்ததெல்லாம் இதுதான்; அவன் அவளை ஒரு முறை-ஆம், ஒரே ஒரு முறைபார்த்துவிட்டான்! அந்தப் பெண்ணும் அப்பொழுதுதான் பிறந்திருக்க வில்லை; அவள் பிறந்து குறைந்த பட்சம் இருபது வருடங்களாவது ஆகியிருக்கும். ஆயினும் அன்றலர்ந்த மலரைப்போல்-பின்பனிக் காலத்துப் புல் வெளியைப் போலநீண்ட நேர மழைக்குப் பிறகு 'கு பீரென்று வெளுத்த வானத்தைப் போல-அவள் அழகு விகசித்தது! ஆனால், அந்த அழகு ஏழ்மையின் இரங்கத் தக்க அழகு