பக்கம்:பாலும் பாவையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 'அப்படிச் சொல்லுங்கள்! - உங்கள இரு வருக்கும் மாதந்தோறும் ஊரிலிருந்து பணம் வந்து கொண்டிருந்த தாக்கும்?- இந்தக் காதலே எப்பொழுதும் இப்படித்தான்! என்னைப்போல் சொந்தமாக உழைத்துச் சம்பாதித்த காசைக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்களே, அவர்களுக்கிடையே காதல் உதய மாவது அபூர்வம்: பிறத்தியார் காசில் வயிற்றை வளர்ப்பவர்களுக் கிடையே தான் அது அளவுக்கு மீறி உதயமாகிறது. இல்லையென்றால் பெற்றோர் காசில் கல்யாணம் பண்ணிக் கொண்டு, சொந்தக் காசில் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்ததும் பாழும் காதல் அஸ்தமித்துவிடுமா?” "எங்கள் காதல் கல்யாணமாவதற்கு முன்பே அஸ்தமித்து விட்டதே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்?” “என்னைக் கேட்டால் காதல் என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லவேயில்லை என்று சொல்வேன். உண்மை என்னவென்றால் 'காமம்' என்று சொல்வதற்குச் சிலர் அந்த நாளில் கூச்சப்பட்டிருக்கிறார்கள் அதற்காகக் காதல்’ என்று அழகாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்!” என்றான் அவன். 'இருக்கலாம்; சில சமயங்களில் எ ன க் கு க் கூ ட அ ப் ப டி த் தா ன் தோன்றுகிறது!’ என்றாள் அவள். “சில சமயம் என்ன? - எந்தச் சமயத்திலும் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. வாழ்க்கையில் காதலை எதிர்பார்த்து ஏ மார்ந்த சில சோணகிரிகளின் கட்டுக் கதை காதல்; அது ஓர் இனிய கனவு அற்புதக் கற் பனை : கதைகளுக்கு ம் காவியங்களுக்கும் உயிர் நாடி போன்றது ஆனால் படித்து அனுபவிப்பதோடு அதை