பக்கம்:பாலும் பாவையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நரிகளைப்போல இங்கே உட்கார்ந்திருந்தபோது அவன் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான். 'என்ன பார்க்கிறீர்கள்? என்று கேட்டேன். அவன் விஷமத்தனத்துடன் சிரித்துக்கொண்டே, பிறந்த மேனியாக வந்திருக்கிறாயே, அதைத்தான் பார்க்கிறேன்!” என்றான். எனக்கு வெட்கமாக இருந்தது. விளையாட்டுக்காக அப்படிச் சொல்லுகிறானாக்கும்’ என்று எண்ணி, 'ஏன், என்னுடைய புடவை, ரவிக்கையெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா? என்று கேட்டேன். 'அதற்குச் சொல்லவில்லை; நகை நட்டுகள் ஒன்று மில்லாமல் வந்திருக்கிறாயே, அதற்காகச் சொன்னேன்!” என்றான். எனக்கு இது என்னவோபோல் இருந்தது. நம்முடைய காதலை விரும்பாதவர்களுடைய நகை நட்டுகள் நமக்கு என்னத்துக்கு என்று எல்லாவற்றையும் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்’ என்றேன். சரி, தொலைய்ட்டும். என்றான் அவன். நானும் அப்பாடி!' என்று பெருமூச்சு விட்டேன். அன்று மாலை கொஞ்சம் இருட்டியதும் இருவரும் முடுக்கிவிட்ட ராட்டினத்தைப்போல இந்த ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அப்பொழுது நாங்கள் பார்த்தவற்றைவிடப் பேசியதுதான் அதிகம். அன்றைய இரவோ, என்றும் நீங்காத இரவாக இந்த இரவு இருக்கக் கூடாதா?’ என்று என்னை நினைக்கச் செய்தது. மறுநாள் காலை, பகலாயிருப்பதால் நான் மட்டும் வெளியே போய் வருகிறேன்' என்றான் அவன். எனக்கும் அவன் சொன்னது சரி என்றுபட்டது. ‘போய் வாருங்கள்; சீக்கிரமாகத் திரும்பிவிடுங்கள்’ என்று சொல்லியனுப்பினேன். அன்று போனவன்தான்; அப்புறம் இந்தப் பக்கம் திரும்பவ்ேயில்லை. எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. அன்று பகல் மட்டுமல்ல; இரவு பூராவும் கண் விழித்து அவனுக்காகக் காத்திருந்தேன்-உஹலம், வரவில்லை; வரவேயில்லை. இந்த விஷயத்தை நான் எப்படி வெளியே சொல்லுவது?-வேறு வழியின்றி என்னை நானே நொந்துகொண்டு, அடுத்த நாள்