பக்கம்:பாலும் பாவையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 தெரிகிறது-என்னை மன்னியுங்கள். நான் இன்னும் மூன்று நாட்கள்தான் இங்கே இருக்கமுடியும். அதுவரைதான் இந்த அறைக்கு வாடகை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு எங்கே போவது?-எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் செய்த தவறைத்தான் அவனும் செய்தான். ஆனால் அவன் ஆண்மகன். அவனால் வீட்டுக்குத் திரும்பமுடிந்தது. என்னால் திரும்ப முடியுமா?-எனவேதான் உங்கள் உதவியை நாடுகிறேன். இனி நீங்கள்தான் எனக்குத் துணை!” என்று மீண்டும் சொல்லித் தன் கதையை ஒருவாறு முடித்தாள் அகல்யா. கனகலிங்கம், "நான் எத்தனை நாட்கள் உங்களுக்குத் துணையாயிருக்க முடியும்? இங்கே நானும் மூன்று நாட்கள்தான் இருக்கப்போகிறேன். அதற்குப் பிறகு சென்னைக்குப் போகப்போகிறேன்” என்றான். “போனால் என்ன, நானும் உங்களுடன் சென்னைக்கே வந்து விடுகிறேனே!” "ஏற்கெனவே செய்த தவறு போதாதென்று மீண்டும் தவறு செய்யப் பார்க்கிறீர்கள்.” “எது தவறு?-என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்; சமூகத்தில் தனித்து வாழ முடியாதவள். அதிலும் நான் வழுக்கி விழுந்தவ’ளாக வேறு ஆகிவிட்டேன். இந்த நிலையில் என்னைப் போன்றவர்களை உங்களைப்போன்ற இதயம் உள்ளவர்கள்தான் ஆதரிக்க வேண்டும்.” “இந்தக் காலத்தில் இதயம் மட்டும் இருந்து பலனில்லையே, அம்மா...!” என்று ஆரம்பிக்கும்போதே அகல்யா குறுக்கிட்டு, ‘என்னைப் பார்த்தால் உங்களுக்கு 'அம்மா மாதிரியா தோன்றுகிறது?’ என்று நாற்பது வோல்ட்” சிரிப்பொன்றைச் சிரித்தாள். கனக லிங்கம் பதிலுக்கு எண்பது வோல்ட்” சிரிப்பொன்றைச் சிரித்துவிட்டு, "அழுகையையும் சிரிப்பையும் நினைத்த மாத்திரத்தில் வரவழைத்துக் கொள்வதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்களே, அது உண்மைதான்!” என்றான்.