பக்கம்:பாலும் பாவையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 சொன்னதும் சோற்றைக கண்ட பசியைப் போல அது பறந்துவிட்டது' எனறான் அவன் அகல்யா பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். 'காதல் ஒரு பசி!-ஆம், காதல் ஒரு பசிதான்!-உணவுப் பஞ்சத்தால் வயிற்றுப் பசி ஏற்படுகிறது, கல்விப் பஞ்சத்தால் அறிவுப் பசி ஏற்படுகிறது. அறிவுப்பஞ்சத்தால் காதல் பசி ஏற்படுகிறது!-இல்லையென்றால் அன்பு மிக்க அப்பாவை விட்டு, அருமை மிக்க அம்மாவை விட்டு, இப்படி யாரோ ஒருவன் பின்னால் திடுதிப் பென்று ఫ్టపై l; வந்திருப்பேனா? அவன் கடவுளிடம் என்னை ஒப்படைத்து விட்டுச் சொல்லிக் கொள்ளாமல் கம்பி நீட்டியிருப்பானா? 'பார்க்கப் போனால் இப்படி நடந்ததில்தான் தவறு என்ன இருக்கிறது?-தான் ஒரு பெண்; என்றைக்காவது ஒரு நாள் அப்பாவையும் அம்மாவையும் விட்டு விட்டு யாரோ ஒருவன் பின்னால் ஓடவேண்டியவள்தானே?இருந்தாலும் அப்பா, அம்மாவுக்குத் தெரிந்து ஓடுவதற்கும் தெரியாமல் ஓடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?பெற்றவர்களுக்குப் பெருமை தேடி வைப்பதற்குப் பதிலாக இப்பொழுது நான் சிறுமையல்லவா தேடி வைத்திருக்கிறேன்? அத்துடன், நானும் பெருமையடைவதற்குப் பதிலாகச் சிறுமையல்லவா அடைந்திருக்கிறேன்? வீடிழந்து வாசலிழந்து, தந்தையை இழந்து, தாயாரை இழந்து மதி இழந்து, மானம் இழந்து, திடீரென்று எங்கிருந்தோ வந்து அடுத்த அறையில் முளைத்த யாரோ ஒருவனிடம் கூடிக் குலா வும் அளவு க்க ல் ல வா இப்பொழுது நான் துணிந்துவிட்டிருக்கிறேன்...? சீ. சீ! என்ன கேவலம், என்ன கேவலம், நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறதே-இந்த நிலையில் நான் இன்னும்