பக்கம்:பாலும் பாவையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவா யிருக்கும்?-உயிரின் மீதுள்ள ஆசையா?-ஆம், உயிரின் மீதுள்ள ஆசைதான்!-ஆனால் அந்த உயிர் மிகமிக அற்பமானதென்றும், உலகத்திலுள்ள ஆண்-பெண்கள் மனம் வைத்தால் சுலபமாக உற்பத்தி செய்யக் கூடியதென்றும் சில சில மேதாவிகள் சொல்கிறார்களே. அது உண்மையில்லையா?-உண்மையா யிருந்தால் அப்படிச் சொல்பவர்கள் ஏன் இன்னும் இந்த உலகத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? மேல் உலகத்துக்குப் போயிருக்கலாமே!’ - ‘எப்படிப் போக முடியும்?-அவர்களும் நானும்-ஏன், இந்த உலகமே-இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் அந்த ஒரு கண நேர இன்பந்தானே? அந்த இன்பம் மனித உயிரைப் போலவே மிகமிக அற்பமானதா யிருக்கலாம். ஆனால் அந்த அற்ப இன்பத்துக்காக இதுவரை உலகத்தில் நடந்திருக்கும் போராட்டங்கள் எத்தனை படுகொலைகள் எத்தனை! சரிந்த சாம்ராஜ்யங்கள் எத்தனை!- அப்பப்பா! எண்ணத்தான் தொலையுமா? எழுத்தில்தான் அடங்குமா? 'அப்படியே இருக்கட்டும்; ஆனால் அந்த இன்பத்தைத் தேடிக் கொள்ள வேண்டிய முறை யில் தேடிக் கொண்டிருக்கலாமல்லவா? அதற்காக இப்படி வந்து நடுத் தெரு வில் நிற்காமல் இருந்திருக்கலாமல்லவா? 'அப்பா, அம்மா மட்டும் தன்னுடைய காதலை ஏற்று க் கொண்டு தனக் கு முறைப்படி கல்யாணம் செய்துவைத்திருந்தால்..? அ ப் .ெ ப ழு து ம ட் டு ம் எ ன் ன வாழ்ந்திருக்கப்போகிறது? தன்னை کا ظا ز -