பக்கம்:பாலும் பாவையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பிதாமகருக்குக் கல்யாணமாகிவிட்டதா?’ என்று கேட்டாள் அகல்யா சிரித்துக்கொண்டே. கனகலிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை. "பிதாமகருக்குக் கல்யாணமாகாமலா நான் பிறந்து இவ்வளவு பெரியவனாக வளர்ந்திருக்கிறேன்.?” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அதற்குள் அகல்யா குறுக் கிட்டு, “நீங்கள் முதல் மனைவிக்குப் பிறந்திருப்பீர்கள்; இரண்டாவதாக எந்தப் படகோட்டியின் பெண்ணையும் உங்கள் அப்பா காதலிக்க வில்லையா? அவருக்காக 'நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று நீங்கள் சபதம் எடுத்துக்கொள்ளவில்லையா? “எத்தனை கல்யாணங்கள் வேண்டுமானாலும் நானே செய்துகொள்கிறேன் நீ ஒரு கல்யாணமும் செய்துகொள்ளாமல் எனக்காகப் பிரம்மச்சாரியா யிருந்தால் சரி!” என்று உங்கள் அப்பா உங்களிடம் சொல்லவில்லையா?” என்று கேள்விக்கு மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போனாள். கனகலிங்கத்துக்கு இப்பொழுதுதான் விஷயம் புரிந்தது. அவன் இடைமறித்து, “நான் பீஷ்மாச்சாரியும் இல்லை; எங்கள் அப்பா எந்தப் படகோட்டியின் பெண்ணையும் காதலிக்கவும் இல்லை!” என்றான். "காதலிக்கவில்லை என்று சொல்லாதீர்கள்; காமுறவில்லை என்று சொல்லுங்கள்!” என்று திருத்தினாள் அவள். “எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்!” என்றான் அவன். “நல்ல வேளை! பீஷ்மாச்சாரியாரையும் அவருடைய தகப்பனாரையும் எல்லோரும் பின்பற்றவில்லை. அப்படிப் பின்பற்றியிருந்தால் உலகமே சூன்யமாய்ப்போயிருக்கும்!-என்ன இருந்தாலும் உங்கள் அப்பா நல்லவராயிருந்திருப்பார் போலிருக்கிறது! அதனால் தான் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்வராயிருக்கிறீர்கள்!” என்றாள் அகல்யா, "ஆச்சரியமாயிருக்கிறதே!-நான் நல்லவன் என்று இதற்குள்