பக்கம்:பாலும் பாவையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மாலை மூன்று மணிக்கு ஆரம்பமாகும்” என்று தலைவர் அறிவித்தார். கனகலிங்கம் கூட்டம் கலைந்ததும் புத்தகங்களை எடுத்து அவசர அவசரமாக அடுக்கிக் கட்டிக்கொண்டு 'நளா விலா சுக்குத் திரும்பினான். 米 $: 米 புத்தகக் கட்டை மேஜையின்மேல் தொப் பென்று போட்டதும் யார் அங்கே?' என்று தன் அறையை விட்டு வெளியே வந்தாள் அகல்யா. "நான்தான், சாப்பாட்டு வேலை யெல்லாம் முடிந்து விட்டதா?’ என்று அவளை விசாரித்தான் கனகலிங்கம். 'இல்லை; நீங்கள் வந்தபிறகு சாப்பிடலா மென்று இருந்தேன்!” என்றாள் அகல்யா. கனகலிங்கம் சிரித்தான். "ஏன் சிரிக்கிறீர்கள்?” “ஒன்று மில்லை. சாப்பாட்டுக்குக் காசு வேண்டாமா?” “வேண்டாம்; காலையில் கொடுத்த காசில் 'மிச்சம் இருக்கிறது!” • “சரி: என்ன இருந்தாலும் பெண்கள் சிக்கனம் பிடிப்பதில் கெட்டிக்காரர்களல்லவா? அதற்கு நீ மட்டும் எப்படி விதிவிலக்காயிருக்க முடியும்?-நான் சாப்பிடப் போகிறேன்! நீயும் சாப்பிடப் போ!' என்று சொல்லி விட்டுக் கனகலிங்கம் கீழே இறங்கினான். அகல்யாவும் அவனைத் தொடர்ந்து கீழே இறங்கினாள். சிறிது நேரத்துக்குப் பிறகு, கனகலிங்கம் சாப்பிட்டுவிட்டு மேலே வந்தான். சட்டைப் பையில் சாவியைக் காணோம். ‘எங்கே வைத்துவிட்டோம்? என்று இப்படியும் அப்படியுமாகக் கொஞ்சம் நடைபோட்டபடி யோசித்துப் பார்த்தான் நினைவுக்கு வரவில்லை. கடைசியில் என்னமோ தெரியவில்லை: