பக்கம்:பாலும் பாவையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 மறுகணம் கனகலிங்கம் ஒரு பெரும் பிரயத்தனம் செய்து தன்னைச் சமாளித்துக் கொண்டான். பிறகு தன் வெடவெடக்கும் கைகளை நீட்டி அவன் அவளிடமிருந்த சாவியை வாங்கிக் கொண்டு, “ஏன் இவ்வளவு நேரம்?” என்று - சம்பந்தா சம்பந்த மில்லாமல் கேட்டு வைத்தான். தன் அழகான முகத்தை இன்னும் அழகு படச் சுளித்துக் கொண்டு, “ஹோட்டல்காரர் என்னை மேலும் மேலும் பொய் சொல்லத் தூண்டுகிறார்; அதனால் தான் இவ்வளவு நேரம்!” என்று பிள்ளையைப் போலக் கொஞ்சினாள் அகல்யா. 'ஏன், நீங்கள் இருவரும் ஏற்கனவே ஏதாவது பொய் சொல்லியிருந்தீர்களா?” என்று அதற்குள் ஒரு நிதானத்துக்கு வந்துவிட்ட கனகலிங்கம் கேட்டான். "ஆமாம்; அந்த மோசக்காரன் அவர் - ஏதோ அன்று கேட்டதற்கு, 'எனக்கு இங்கே உத்தியோகம் மாற்றலாகி யிருக்கிறது!’ என்று சொல்லிவைத்தான். அது மட்டுமல்ல; நாலே நாலு நாட்கள்தான் ஹோட்டலில் தங்கியிருப்போமென்றும், அப்புறம் வீடு பார்த்துக்கொண்டு போய்விடுவோமென்றும் அவன் அளந்து வைத்தான். இப்பொழுது 'உங்கள் கணவர் எங்கே?' என்று அந்த ஹோட்டல்காரர் கேட்கிறார். நான் என்ன வென்று சொல்வது?வீடு கிடைத்து விட்டதென்றும் ஊரிலிருந்து சாமான்களை எடுத்துக்கொண்டு வரப்போயிருக்கிறாரென்றும் சொன்னேன். அப்படியானால் இப்பொழுது நீங்கள் தனியாக வா இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். இல்லை, அடுத்த அறைக்கு வந்திருப்பவர் அவருடைய நண்பர்தான். அவரிடம் என்னைப் பார்த்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார் என்று கடைசிப் பொய்யைத் தூக்கிப்போட்டேன். அவர் மிரண்டு போய், அப்படியானால் இந்தாருங்கள் - இது அவருடைய சாவிபோலிருக்கிறது; தயவு செய்து இதை