பக்கம்:பாலும் பாவையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றிரவு ஹோட்டலுக்குத் திரும்பும்போது கனகலிங்கம் கொஞ்சம் உற்சாக மாகவே திரும் பி னான். காரணம் வேறொன்றுமில்லை; அன்று பஞ்சாங்கத்தில் அறுநூறு பிரதிகளும், தொடுகுறி சாஸ்திரத்தில் அறுபது பிரதிகளும் விற்றிருந்ததோடு, திருக் குறளி லுங் கூட ஒரு பிரதி விற்றிருந்ததுதான்! அவவளவு பெரிய திருவிழாவில இந்தப் புத்தகவிற்பனை அப்படியொன்றும் அதிகமில்லை யென்றாலும், இவ்வளவாவது விற்றதே! என்பதில் அவனுக்கு ஒரு திருப்தி இருந்தது. அந்தத் திருப்தியில் புத்தகக் கட்டைத் துக்கி அனாயாசமாகத் தோளில் வைத்துக்கொண்டு, பை நிறையக் காசுகள் குலுங்க, அவன் பெருமிதத்தோடு வந்துகொண்டிருந்தான். வழியில் அவனை நோக்கி, "கூலி வேனுங்களா சாமி, கூலி?” என்று பல்லைக் காட்டினான் ஒருவன். “நானே கூலி, எனக் கெதுக்குக் கூலி?” என்று அவனைப் பொருட் படுத்தாமல்சென்ற கனகலிங்கம், நாலு அடிகள் எடுத்து வைத்ததும் அகல்யாவை நினைத்துக்கொண்டு நின்றான். ‘ஒரு வேளை இன்று தன்னை எதிர்பார்த்து அவள் மாடி வரா ந் தாவில் நின்று கொண்டிருந்தாலும் நின்று கொண்டிருக்கலாம். அவளுக்கு எதிரில் தானே புத்தக்க கட்டைத் துக் கிக் கொண்டு செல்வது அவ்வளவு நன்றாயிராதல்லவா? அதைவிட ஒரு கூலியுடன் செல்வது கொஞ்சம் கெளரவமாயிருக்குமல்லவா..? கனகலிங்கம் அந்தக் கூலியை நோக்கித் திரும்பினான். அவனுக்குச் சிரிப்பு வந்தது, சிரித்தான். வேறு யாரையும் பார்த்துச் சிரிக்கவில்லை. தன்னைத் தானே பார்த்துத்தான் சிரித்துக்கொண்டான்! இது என்ன வேடிக்கை! இத்தனை நாட்களும் விரும்பாத கெளரவத்தை இன்று தான் ஏன் விரும் பவேண்டும்?வேண்டாம், கெளரவத்தை விலைகொடுத்து வாங்க வேண்டாம்.