பக்கம்:பாலும் பாவையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தனக்கென்று இருக்கும் கெளரவம் தனக்கு என்றும் இருந்தால் போதும்.' கனகலிங்கம் மேலே நடந்தான். 'உங்கள் ராசாத்திக்கு ரோசாப்பூ வாங்கிக் கொண்டு போக வில்லையா. ஐயா?” என்று அவனை நோக்கிச் சிரித்துக்கொண்டே கேட்டாள் ஒரு பூக்காரி. "நான் ராசாவும் இல்லை; எனக்கு ராசாத்தியும் இல்லை!” என்று அவளையும் பொருட்படுத்தாமல் சென்ற கனகலிங்கம், நாலு அடிகள் எடுத்து வைத்த தும் அகல்யாவை நினைத்துக்கொண்டு நின்றான். 'இன்று அவளுக்கு இரண்டு ரோசாப் பூக்கள் வாங்கிக்கொண்டு போய்க் ஆ கொடுத்தால் எ ன்ன ? அவற்றின் இதழ்களைப் போலவே அவளும் தன் அழகான இதழ்களை விரித்துச் சிரிப்பாளல்லவா..? கனகலிங்கம் பூக்காரியை நோக்கித் திரும்பினான். 'இது. என்ன பைத்தியம்! யாருக்கு யார் பூ வாங்கிக்கொண்டு போய்க் கொடுப்பது? யாருக்காக யார் சிரிப்பது?-வேண்டாம்; வேண்டவே வேண்டாம். தான் அந்த ஹோட் டலில் தங்கியிருக்கும் வரை தன்னால் இயன்ற உதவியை 'மனிதன் என்ற முறை'யில் அவளுக்குச் செய்தால் போதும்.' கனகலிங்கம் மேலே நடந்தான். 'ஒ, மச்சான்!.ஒ. மச்சான்!” என்ற கூக்குரல் எங்கிருந்தோ குழைந்து வந்து அவன் காதில் விழுந்தது. யாருடைய மச்சானை யார் இப்படி வருந்தி வருந்தி அழைக்கிறார்கள்?’ என்று தனக்கு வேண்டாத கவலையை வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டு அவன் கவனித்தான். அந்த அழைப்பு ஒரு திரைப்பட இசைத்தட்டிலிருந்து வருகின்றதென்றும், அந்த இசைத்தட்டை