பக்கம்:பாலும் பாவையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை “மாதா தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம” என்று பாரதியார் கொதி நிலையில் கூறுகிறார் இதனை விந்தன் எழுதியுள்ளார் பாலும் பாவையும மூலம் நாவல் உயிர்த் துடிப்புடனும், உணாச்சிப் பெருக்குடனும் சமூக அவலங்களை இடித்துரைக்கிறது பெண்கள் இயல்பில் மென்மையானவர்கள் அன்புக்கு இளகிப் போகிறவர்கள் காதல் துளிர்க்கும் பருவத்தில் தன்னையே ஒப்படைக்கத் தயாராக இருப்பவர்கள் தன் காதலின் நம்பகத் தன்மையை பரிசீலிக்க வேண்டும் என்ற நினைப்பையே நினைத்துப் பாராதவர்கள் அந்த அளவு அன்புக்கு அடிமைப் படுபவர்கள் இதனால் உருவக் கவர்ச்சிக்கும். இனிய பேச்சுக்கும் ஏமாந்து போகக் கூடாது என்பதற்கு 'பாலும் பாவையும்’ நாவல் எச்சரிக்கை செய்கிறது 'பாலும் பாவையும் நாவல் தமிழில் முதலில் வெளிவந்த அச்சும் அமைப்பும் மிகுந்த பாராட்டு பெற்றது அதனை அந்த அமைப்பிலேயே வெளியிட்டுள்ளோம் மா. நந்தன்