பக்கம்:பாலும் பாவையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 “ஸ்னோ வேண்டாமா?” என்று ஏமாற்றத்துடன் கேட்டான் ஸ்லுன்வாலா. ‘'வேண்டாம் ; இந்தா காசு!” என்று அவனிடம் இரண்டனாவைக் கொடுத்துவிட்டு, ஹோட்டல் நெருங்கி விட்டதால் புத்தகக்கட்டைக் கையிலேயே பிடித்துக்கொண்டு, கனகலிங்கம் மேலே நடந்தான். 'நளா விலாஸின் வாசலையடைந்ததும் அவனுடைய கண்கள் அவனையும் அறியாமல் மாடியை நோக்கின. அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; அங்கே இரண்டு கண்கள்சாதாரண கண்களல்ல;-கன்னங்கரேலென்று மை தீட்டிய கண்கள்-தங்கள் இமைகளால் சைகை காட்டி, விழிகளால் இன்பமூட்டி, அவனை 'வா, வா!' என்று வரவேற்றுக் கொண்டிருந்தன. கனகலிங்கம். அந்தக் கண்களைப் பொருட்படுத்தாமல் உள்ளே !ه لقU) !g لالا முயன்றான். முடியவில்லை-ஆமாம், முடியவே யில்லை! அவன் வியப்பும் திகைப்பும் அடைந்தவனாய் நின்றது நின்ற படி யோசித்தான். அப்படி யோசித்துப் பார்த்ததில் இன்னொரு முறை அந்தக் கண்களை வெறுமனே பார்ப்பதில் அப்படி ஒன்றும் குற்றமில்லை என்று தோன்றிற்று அவனுக்கு-பார்த்தான்! அவ்வளவுதான்; வந்தது மோசம்!அவன் உள்ளம் சலசலத்தது; உடம்பு கிலுகிலுத்தது. 'இது என்ன அதிசயம்! தான் என்றும் காணாத-தான் என்றும் அனுபவிக்காத-உலக மகா அதிசயமாயிருக்கிறதே! இவ்வாறு தன் உடம்பைக் கிலுகிலுக்கவைப்பதற்கு அந்தக் கண்களில் என்ன கவர்ச்சி இருக்கிறது? என்ன காந்த சக்தி இருக்கிறது?