பக்கம்:பாலும் பாவையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 என்ன மந்திரசக்தி இருக்கிறது? என்ன மாய சக்தி இருக்கிறது?’ கனகலிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை-ஆமாம். ஒன்றும் புரியவேயில்லை! இன்னொரு முறை பார்த்தாலாவது ஏதாவது புரியுமோ என்று அவன் மீண்டும் ஒரு முறை அவளைப் பார்த்தான். அவள் புன்னகை பூத்த வண்ணம் அவனைக் கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டே திரும்பினாள். அவள் எதிர்பார்த்தது போலவே அவளுடைய இரட்டைப் பின்னல்கள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தன. அந்தப் பின்னல்களுக்கு மேலே நட்சத்திர வடிவில் மல்லிகை மொட்டுக்களை வைத்துத் தைத்திருந்த இரண்டு பட்டைகளை அவள் சூடிக் கொண்டிருந்தாள். வால் நட்சத்திரங்களை ஒத்திருந்த அந்தப் பின்னல்களைக் கண்டதும் அவனால் சிரிக்காமலிருக்க முடியவில்லை; சிரித்தான். அதே சமயத்தில் அவனை நோக்கித் திரும்பிய அவளும் சிரித்தாள். ஆனால் இம் முறை அவள் இதழ்கள் மட்டும் சிரிக்கவில்லை; கண்களும் சிரித்தன! இந்தச் சமயத்தில் 'ஸார், ஸார்!’ என்று தன்னை யாரோ கூப்பிடுவது போலிருக்கவே, கனகலிங்கம் திடுக் கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஸ்லுன்வாலா அவனுக்கு எதிரே வியர்க்க விறுவிறுக்க வந்து நின்றுகொண்டிருந்தான் “என்ன..?” என்று ஒன்றும் புரியாமல் அவனை நோக்கிக் கேட்டான் கனகலிங்கம். 'இந்தாருங்கள், உங்களுடைய புத்தகக் கட்டு!-'ஷேவிங்’ பண்ணும்போது லோப்பை வழித்து வைப்பதற்கு உபயோகமா யிருக்கட்டுமென்று நான் பழைய பேப்பர்’களை யெல்லாம் சேர்த்து ஒரு கட்டாகக் கட்டிவைத்திருந்தேன். அதை எடுத்துக்கொண்டு வந்து விட்டீர்கள்!” என்று சொல்லிக் கொண்டே, தான் கையோடு கொண்டு வந்திருந்த புத்தகக் கட்டை கனக லிங்கத்தினிடம் கொடுத் தான் ஸ்லுன்வாலா