பக்கம்:பாலும் பாவையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கேட்டு விட்டு, அகல்யா ஒரு தினுசாகச் சிரித்தாள். “அவன்தான் வயிற்றுக்குச் சோறு தேடுவதிலேயே தன்னுடைய நேரத்தையெல்லாம் கழித்துவிடுகிறானே, அவனால் எப்படி அழகை அனுபவிக்க முடியும்?” என்றான் கனகலிங்கம். "நான் அந்த ஏழையைச் சொல்லவில்லை.” "அப்படியானால் நீ இந்த ஏழையைச் சொல் கிறாயாக்கும்?” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே, தன்னை அவளுக்குச் சுட்டிக் காட்டினான் கனகலிங்கம். அவன் சிரித்தானோ இல்லையோ, அதுதான் சமயமென்று "அது கிடக்கட்டும்; இங்கே வாருங்களேன் என்று அவனுடைய கரத்தைப் பற்றிக் கரகரவென்று இழுத்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றாள் அகல்யா. - "ஏன் என்ன விசேஷம்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் அவன். “இந்த மேஜையின் மீது என்ன இருக்கிறதென்று பார்த்தீர்களா?” கனகலிங்கம் அந்த மேஜையைப்பார்த்தான். அதன் மேல் அழகுச் சாதனங்கள் பல வைக்கப்பட்டிருந்தன. "இவை யெல்லாம் உனக்கு ஏது?” “சென்னையில் ஓர் அந்தரங்கச் சிநேகிதி இருக்கிறாள் எனக்கு பெயர் சியாமளா, அவளுக்கு என்னுடைய காதல் நாடகமெல்லாம் தெரியும்.” “தெரிந்தும் சும்மாவா இருந்தாள்..?” "சும்மா இல்லாமல் என்ன செய்வதாம்?” “ஊர் முழுவதும் பறை சாற்றவில்லையா?” 'இல்லை.” "ஆச்சரியமாயிருக்கிறதே!-உலகத்தில் எங்கேயாவது பெண்ணுக்குப் பெண் தூற்றாமல்கூட இருப்பதுண்டா, என்ன?” என்று கனகலிங்கம் கேட்டான்.