பக்கம்:பாலும் பாவையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் சாப்பிட்டுவிட்டு மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்து மாடிப் படி ஏறிவந்தார்கள். அகல்யா, கனகலிங்கத்தைக் கொஞ்சம் நெருங்கி, 'மத்தியானம் அந்த ஹோட்டல்காரரைக் கண்டதும் நீங்கள் பயந்தே போய்விட்டீர்களல்லவா?” என்று கேட்டுவிட்டுக் கைகொட்டி நகைத்தாள். கனகலிங்கம் கொஞ்சம் பின்வாங்கி, “ஹோட்டல்காரரைக் கண்டு பயப்படவில்லை; உன்னுடைய கைத் துடுக்கைக் கண்டுதான் பயந்துபோனேன்!” என்றான். “பொய் சொல்லாமல் சொல்லுங்கள்!” என்று அகல்யா இன்னும் கொஞ்சம் நெருங்கினாள். “பொய் சொல்வதற்கு என்னிடம் ஒரு குற்றமும் இல்லையே: உண்மையைத் தான் சொல் கிறேன்!” என்று சொல்லிக் கனக லிங்கம் இன்னும் கொஞ்சம் பின் வாங்கினான். இப்படியாக அவள் நெருங்க, இவன் விலக இவன் விலக, அவள் .ெ ந ரு ங் க - இ ரு வ ரு ம் ஒவ்வொரு படியிலும் நின்று நின்று, ஏறி ஏறிக் கடைசியாக மாடியை அடைந்தார்கள். “என்ன இருந்தாலும் ஒருவரையொருவர் இரகசியம்ாகக் காதலிப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கத்தான் செய்கிறத!” என்றாள் அகல்யா. "இருக்கலாம்; எனக்கு அதில் அனுபவமில்லை!” என்றான் கனகலிங்கம். 'அனுபவம் சும்மா வந்து விடுமா? பழகப் பழகத்தான் வரும்.” 'யாரோடு யார் பழகுவது?” “என்னோடு நீங்கள் பழகுவது.”