பக்கம்:பாலும் பாவையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 நாட்கள் இவளிடமிருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது?” என்று எண்ணிப் பெரிதும் கவலையடைந்தான். ஆனால் அந்தக் கவலையை அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவள் மனம் புண்படு மல்லவா? எனவே, அனுதாபத்துடன் அவளைப் பார்த்தான் அவன். சாவோடு போராடும் அந்திய கால அழகு அவள் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. பரிதாபத்துக்குரிய அந்த ஜீவன் பெண் மை உணர்ச்சி யை யே இழந்து விட்டிருந்தது. எவ்வளவு பயங்கரமான சோதனை! இவள்தான் பெண்மையை இழந்து விட்டாளென்றால், இவளுக்காகத்தானுமா ஆண்மையை இழந்துவிடுவது? கனக லிங்கம் யோசித்தான், யோசித் தான். யோசித்துக்கொண்டே இருந்தான். கடைசியில். அவனுடைய ஆண்மைதான் வென்றது; பலவீனம் தோற்றது. 'முடியாது; முடியவே முடியாது. பெண்மை என்பது கற்பை இழப்பதுமல்ல; ஆண்மை என்பது அதைக் கெடுப்பதுமல்ல! இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவன் அவளை வெறித்துப் பார்த்தான். அவள் ஒரு காரணமுமின்றிச் சிரித்தாள். சிரித்தாள், சிரித்துக்கொண்டே இருந்தாள். 'இதைப் பருவகாலக் கோளாறு என்றும் சொல்வதற்கில்லை: நவீன கால இலக்கியங்களைப் படிப்பதன் காரணமாக உண்டாகும் கோளாறு என்று வேண்டுமானால் சொல்லலாம்!இல்லையென்றால் ராஜாக்களிடத்திலும் ராணிகளிடத்திலும், அரண்மனை களி லும் அந்தப் புரங்க ளிலும் மா ட மாளிகைகளிலும் கூடகோபுரங்களிலும் வளரவேண்டிய காதலை