பக்கம்:பாலும் பாவையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ண்ட நேரம் அகல்யா வின் அழு கை யை ச் கனகலிங்கத்தால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்து சென்று. தன் அறையின் விளக்கை அனைத்தான் கனகலிங்கம் விளக்கை அனைத்ததும் அகல்யாவுக்குப் பகீர்’ என்றது. தன்னுடைய அழுகையைப் பொருட்படுத்தாமல் அவன் எங்கே படுத்துக்கொண்டு விடப்போகிறானோ என்ற பயந்தான்! நல்ல வேளையாக அப்படியெல்லாம் ஒன்றும் நேரவில்லை; மெல்ல அடிமேல் அடி எடுத்துவைத்துக் கனகலிங்கம் அவளுடைய அறைக்குச் சென்றான், அவனைக் கண்டதும் தன் மடியின் மே லிருந்த தலையணையைத் தூக்கித் துர எறிந்து விட்டு அவள் விறைப்புடன் எழுந்து நின்றாள். கனக லிங்கம் சிரமப்பட்டுச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சிரித்தான். அவள் < 9| 3 j &ij) 68r எரித்து விடுபவள்போல் பார்த்தாள் ”கோபத்திலும் நீ மரியாதையை மறக்கவிலலை போலிருக்கிறதே!” என்றான் அவன். பதில் இல்லை. ஒருவேளை நீ எழுந்து நின்றதும் கோபத்தின் அறிகுறிதானோ?” என்றான் அவன் மீண்டும். பதில் இல்லை. “சரி, அப்படியானால் வருகிறேன்!” என்று சொல்லிவிட்டுக் கனகலிங்கம் அவளைக் கடைக்கண்ணால் பார்த்து கொண்டே தன் அறைக்குத் திரும்பினான். அவன் எதிர்பார்த்தது நடந்தது அதுவரை கடைப்பிடித்து வந்த மெளனத்தை அகல்யா கலைத்தாள்! ஆம், அவளுடைய உள்ளத்தை ஏதோ ஒரு சபலம் உந்தித் தள்ளவே, அதுவரை அசையாமலிருந்த அவள் அசைந்தாள்