பக்கம்:பாலும் பாவையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது மட்டுமல்ல; நின்ற நிலையிலிருந்து ஓர் அடி எடுத்து முன்னால் வைத்து, “என்ன - - ேய | ச ைன ? - .ெ ச ா ல் லி வி ட் டு ப் போங்களேன்” என்றும் சொன்னாள். பாவ ம் , அந்த நிலையிலும் அவளுடைய முகம் அவனிடம் எதையோ எதிர்பார்த்து மலர்ந்து தொலைந்தது. * கனகலிங்கம் வெற்றிப் புன்னகையுடன் திரும்பி, 'அந்த இந்திரன் எழுதிய கடிதம் உன்னிடம் இருக்கிறதா?” என்று கேட்டான், கண்களை உயர்த்தி நெற்றியைச் சுருக்கிக் கொண்டே. இந்த ரஸ்மற்ற கேள்வியைக் கேட்டதும் அவள் முகம் குவிந்தது. இருந்தாலும், “ஏன்?” என்று ஏமாற்றத்துடன் கேட்டு வைத்தாள். "அந்தக் கடிதத்தைக் கொண்டு நான் அவன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கலாமென்று நினைக்கிறேன். ” “எதற்காம்? ‘கடமையை அவனுக்கு உணர்த்துவதற்கு. ...!” 'நான் கடமையை விரும்பவில்லையே ; காதலை விரும்புகிறேன்......?” "காதல், காதல் என்று கிளிப்பிள்ளைபோல் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்?- உலகத்தில் காதலை விடக் கடமைதான் மிகவும் சக்தியுடையதாயிருக்கிறது.” - "இருக்கலாம்; அதைப் போலீசின் உதவியைக் கொண்டு உணர்த்த நான் தயாராயில்லை.” “சொல்வதைக் கேள்: அதனால் உன் வாழக்கை மீண்டும் மலரும்.” 'மலராது மானம் போகும்!”