பக்கம்:பாலும் பாவையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 'அவனுடைய பெற்றோரிடம் உன்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு!” அகல்யா சிரித்தாள். “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான் கனகலிங்கம். “பிள்ளையே என்னுடன் சேர்ந்து வாழ விரும்பாத போது, பெற்றோர் எப்படி விரும்புவார்கள்?” "ஏன் நீதியையும் நேர்மையையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாதா?” “முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில், எங்களைப் போலவே அவர்களும் பணக்காரர்கள்.” "பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவனாயிருந்துமா அந்தப் பாவி உன்னிடம் பணத்தை எதிர் பார்த்தான்?” "ஆமாம்; ஏழையை விடப் பணக்காரனுக்குத்தானே பணத்தின்மீது ஆசை அதிகமாயிருக்கிறது!” கனகலிங்கம் ஒரு கணம் மெளனமாயிருந்தான். மறுகணம், "நீ சொல்வது, ஒருவிதத்தில் உண்மைதான்!” என்றான். அவனுடைய மூளை குழம்பிற்று. ஒன்றும் புரியாமல் தலையைச் சொறிந்து கொண்டே அவன் திரும்பினான். “எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டுவிட்டு. ஏன் கேட்டோம்?’ என்று தெரியாமல் விழித்தாள் அவள். “எங்குமில்லை; இதோ வருகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே, அந்த அறையை விட்டு வெளியே போவதற்காக அவன் கதவைத் திறந்தான். அவ்வளவுதான், அங்கிருந்து யாரோ ஒருவன் தடதட வென்று விழுந்தடித்துக் கொண்டு ஓடும் சத்தம் அவன் காதில் விழுந்தது! கனகலிங்கத்துக்கு ஒரு கணம் ஒன்றும் தோன்றவில்லை; திக்பிரமை பிடித்தவன்போல் நின்றான். மறு கணம், திருடன், திரு டன்! என்று கத்த வேண்டும்போல் தோன்றிற்று அவனுக்கு-ஆனால் என்ன பலன்,