பக்கம்:பாலும் பாவையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 தொந்தரவு செய்ய விரும்பாமல் அகல்யா குழம்பிய மனதுடன் தன் அறைக்குள் நுழைந்தாள். sk 3: *k அன்றிரவு தூக்கம் ஒதுங்கி நின்று அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 'வந்தவன் யாராயிருக்கும்?' என்ற கேள்வியைப் போட்டுக்கொண்டு இருவரும் விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். ஏழைகளின் வேதனையைக் கண்டு இரங்காத உலகத்தைப் போல அன்று தூக்கமும் கடைசிவரை அவர்களுக்காக இரங்கவேயில்லை. மறுநாள் வழக்கம்போல் பொழுது விடிந்தது. ஆனால் கனகலிங்கத்தின் கவலை விடியவில்லை. அகல்யாவின் துயரமும் விடியவில்லை. இருந்தாலும், 'வந்தவன் யாராயிருந்தாலென்ன!-வருகிற ஆபத்து வழியில் நிற்கப் போவதில்லை' என்று துணிந்து கனகலிங்கம் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தான். அதேமாதிரி அகல்யாவும் துணிந்து எழுந்து உட்கார்த்தாள். மழை விடாமல் பெய்துகொண்டிருந்ததால் கனகலிங்கம் அன்று விழாவுக் குச் செல்லவில்லை. விழாவுக் காகக் கொட்டகைக்குள் சென்று கடை வைக்கவும், அவனுக்கு அனுமதி கிடையாது. காரணம், தமிழை வளர்ப்பதில் ஆர்வங் கொண்டிருந்த விழாக்காரர்கள் பணத்தை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்ததுதான். எனவே, தெளிவற்ற சிந்தனைகள் பலவற்றுக்கு ஆளாகி, அவன் நேரம் போவதே தெரியாமல் உட்கார்ந்திருந்தான். பகல் ஒரு மணி இருக்கும். ஹோட்டல் 'ஸர்வர்' அகல்யாவின் அறைக்குள் நுழைந்து "நேரமாகிறதே நீங்கள் வரவில்லையா?” என்று கேட்டான். “இல்லை. எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது. நான் இன்று சாப்பிடப் போவதில்லை!" என்றாள் அகல்யா.