பக்கம்:பாலும் பாவையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 “சரி” என்று சொல்லி விட்டு, அந்த ஸர்வர்” கனகலிங்கத்தின் அறைக்கு வந்தான். கனகலிங்கம் அவனை நோக்கி, “இன்று நானும் இங்கே சாப்பிடப் போவதில்லை. இந்த ஊர் நண்பர் ஒருவர் என்னை விருந்துக்கு அழைத்திருக்கிறார்; அவருடைய வீட்டுக்கு நான் சாப்பிட்ப்போகவேண்டும்” என்றான். 'ஸர்வர் கீழே இறங்கி சென்றதும், "எந்த ஊர் நண்பர் உங்களை விருந்துக்கு அழைத் திருக்கிறார்?’ என்று கேட்டுக்கொண்டே அகல்யா கனகலிங்கத்தின் அறைக்குள் நுழைந்து அவனுக்கு எதிர்த்தாற்போலிருந்த மேஜையின்மீது ஏறி உட்கார்ந்தாள் அவளை ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே ‘இந்த ஊர் நண்பர்தான்!” என்றான் கனகலிங்கம். “உண்மையாகவா சொல்கிறீர்கள்?” "ஆமாம்.” “பொய்; நான் இதை நம்பவே மாட்டேன்!” "நீ சொன்னது மட்டும் உண்மையோ?” “இல்லை பொய்தான்” "அப்படியானால் நான் இதை நம்புகிறேன்!” 'உண்மையை நம்புவிட்டாலும் பொய்யையாவது நம்புகிறீர்களே, ரொம்ப சந்தோஷம்!” “ளது உண்மை?” என்று கேட்டான் கனகலிங்கம். அகல்யா சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், "நான் உங்களைக் காதலிப்பது தான்!” என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவைத்தாள். - - "காதலிப்பது உண்மையாயிருக்கலாம். ஆனால் அதற்குக் காசு வேண்டுமென்று நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லவில்லையா?” என்றான் அவன். "காதலுக்கும் காசுக்கும் சம்பந்தமேயில்லை; அது வேறு. இது வேறு என்று நானும் உங்களிடம் ஏற்கெனவே சொல்லவில்லையா?” என்றாள் அவள்.