பக்கம்:பாலும் பாவையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கனகலிங்கம் சிரித்தான். சிரித்துவிட்டு, “காசில்லாமல் காதலிக்க முடியாது என்பதை ஒருவன் உனக்கு அனுபவபூர்வமாக உணர்த்தியிருந்தும் நீ இப்படிப் பேசுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது?’ என்றான். “அதைவிட ஆச்சரியம் நீங்கள் அடிக்கடி உங்களோடு அவனை ஒப்பிட்டுப் பேசுவதுதான்?” என்றாள் அகல்யா. 'ஏன், அவனைப் போலவே நானும் இருக்கக் கூடாதா?” என்று கனகலிங்கம் கேட்டான். “இருக்கமாட்டிர்கள் என்று நம்பித்தான் இவ்வளவு தூரம் உங்களை நான் வற்புறுத்துகிறேன்.” “இருந்தால்...?” “என்னுடைய துரதிர்ஷ்டந்தான்” 嘲 'துரதிர்ஷ்டமல்ல முட்டாள்தனம்.” “சரி; புத்த சாலித்தனம் எதுவென்று நீங்களே சொல்லுங்களேன்..?” “முதலிலேயே நம்பாமலிருப்பது.” "அது எப்படி முடியும்? வாழ்க்கையில் ஒருவரையொருவர் நம்பித்தானே தீரவேண்டியிருக்கிறது?” “யாரை யார் நம்புவது? ஆண்களை ஆண்கள் நம்பலாம்; பெண்களைப் பெண்கள் நம்பலாம்-அதனால் குடிமுழுகிப் போய்விடாது. ஆனால் பெண்களை ஆண்கள் நம்பும்போது ஆண்களைப் பெண்கள் நம்பும்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்...!" “அதற்கு எல்லோருக்கும் வயது என்றும் பதினாறாக இருக்க வேண்டும்...! ** +& ליל ஏன்? "அப்பொழுதுதான் ஆண்களைப் பற்றிப் பெண்களும் பெண்களைப் பற்றி ஆண்களும் சாங்கோபாங்கமாக ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்க முடியும்.” “எதற்கு.?”