பக்கம்:பாலும் பாவையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 'நீங்கள் சொல்வதுபோல் பெண்களை ஆண்களும் ண்களைப் பெண்களும் நம்புவதற்குத்தான்!” என்று சொல்லிவிட்டு, அகல்யா சிரித்தாள். கனகலிங்கம் பேசாமலிருந்தான். “எனக் குத் தெரிந்த வரை என் ைன நீங்கள் காதலிக்க மாட்டேன் என்று சொல்லுவதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறது!’ என்று அகல்யா மீண்டும் பேச்சை ஆரம்பித்து வைத்தாள். இதைக் கேட்டதும் கனகலிங்கத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில், அந்த ஒரே ஒரு காரணம் இன்னதென்பதை அவன் ஏற்கனவே அறிந்திருந்தான். சர்ச்சைக்குரிய அந்தக் காரணத்தை வெளியிட அவன் விரும்பவில்லை. இப்பொழுது அவளே அதை வெளியிடத் துணிந்து விட்டாள் என்று அறிந்ததும் அவன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விட்டது. அதை எப்படியாவது சமாளிக்க எண்ணி, "ஒரே ஒரு காரணந்தானே இரண்டு காரணங்கள் இல்லையே?’ என்று அவன் சிரித்து மழுப்பினான். அவள் விடவில்லை. "ஒரே ஒரு காரண ந் தான்: சொல்லட்டுமா?’ என்று துள்ளி எழுந்தாள். “சொல்லு...?” என்றான் அவன் மென்று விழுங்கிக் கொண்டே. “சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?” என்று அவள் மீண்டும் அவனை நோக்கிக் கேட்டாள். 'மாட்டேன்.” "நான் ஏற்கனவே ஒ ரு வ ன ல் .ெ கடுக் கப்பட்டு விட்ட வள் என்பது தான் அந்தக் காரணம்!” அவ்வளவுதான் கனகலிங்கத்தின் தலையில் இடிவிழுந்தது