பக்கம்:பாலும் பாவையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்றாம் நாள் காலை விழா முடியாவிட்டால் மக்களே அதை முடித்து விடுவார்கள் போலிருந்தது. அவ்வளவு சிரமத்தை அவர்களுக்குக் கொடுக்க விழாக்காரர்கள் விரும்ப வில்லை. தாங்களாகவே முடித்து விட்டார்கள். ஆனால் ஏதோ கூடினோம் கலைந்தோம் என்று இருக்க வேண்டாமென்று அவர்கள் பலனை எதிர்பாராமல் ஆயிரத்தோரு தீர்மானங்களை அமோகமாக நிறைவேற்றி வைத்து விட்டுத் தங்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பினார்கள். கனகலிங்கமும் கடையைக் கட்டிக்கொண்டு ஹோட்டலுக்கு வந்ததும். வராததுமாகப் புத்தகங்களையெல்லாம் சேர்த்து ஒரு கட்டாகக் கட்டி பழையபடி சென்னை க்கு அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினான். மத்தியானம் சாப்பிட்டு முடிந்ததும், “இன்றிரவு தானே ஊருக்குக் கிளம்பப் போகிறீர்கள்?’ என்று அகல்யா கனகலிங்கத்தை நோக்கிக் கேட்டாள். "ஆமாம்; இனிமேல் எ ன் ன ேவ ைல இருக்கிறது?-ஊருக்கு க் கிளம்ப வேண்டியது தான்!-நீ தயாராகி விட்டாயா?” ‘நேற்றிரவே நான் தயாராகி விட்டேனே?” 'மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா, என்ன?” “போதும், வாயை மூடிக்கொண்டிருங்கள்!-நான் மீன் குஞ்சுமில்லை; நீங்கள் எனக்காக ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் கொக்குமில்லை!” "இதோ மூடிக்கொண்டான்!” என்று கனகலிங்கம் தன் வாயை இரு கைகளாலும், பொத்திக்கொண்டேன். அவனுடைய கைகளை விலக்கி விட்டு விட்டு, ‘நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேனே..?”என்றாள் அவள்.