பக்கம்:பாலைக்கலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

He^ggós Gs^ss * s-elé arþÉg 3 பண்டரங்கம் ஆடுங்கால், பனை எழில் அணை மென் தோள், வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? 1O கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவற் புரள, தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால், முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ? என ஆங்கு - பாணியும், துக்கும், சீரும், என்று இவை 15 மாண் இழை அரிவை காப்பு ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி அந்தணர் என்போர் அறவோர்கள். ஒழுக்கநெறியை நன்கு அறிந்தவரே அந்தணர். அவர்க்கு அருமையான மறை நூல்கள் பலவற்றையும் முன்னர்ப் பகர்ந்தாய். தெளிந்த நீர் உடைய கங்கையின் கொடிய வேகத்தை ஒடுக்குவதற்காக, நின் சடையிலே அதனை ஏந்தி அடக்கிக் கொண்டாய். கொடுஞ்செயல்கள் புரிந்த திரிபுரங்களையும் நெருப்பிட்டு நீறாக்கி நின்றாய். வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவனாக, அவற்றைக் கடந்து, அவற்றிற்கும் மேலாகவும் நிற்பாய். முதுகிடாத, கடுமையான கூளிப்போர் ஆற்றும் ஆற்றலும் உடையாய் நீலமணிபோலக் கறை விளங்கும் கழுத்தும், எட்டுக் கரங்களும் கொண்டு விளங்குவாய். அத்தகைய ஐயனே யான் கூறுவதையும் கேட்பாயாக: ஒலிமிக்க பறைகள் பல ஒலிசெய்ய, மாறிமாறிப் பல்வேறு வடிவங்களும் காட்டிக்காட்டி, நீ கொடுமையான கொட்டி’ என்ற கூத்தினை ஆடுவாயே, அப்போது பக்கம் உயர்ந்து அகன்ற அல்குலினையும், கொடிபோன்ற நுண்மையான இடையினையும் உடையவளோ, தாளம் முடிந்துவிடுங் காலத்தைக் குறிக்கும் சீரைத் தந்து நின்னருகே நிற்பவள்? மிகுதியாகச் செல்லுகின்ற கொடிய போர்கள் பலவற்றையும் வென்றாய். அந்த வலிமையால், பகைவரது உடல்கள் வெந்த நீற்றையும் அணிந்தாய். நீ, பாண்டரங்கம் என்ற கூத்தை ஆடுங்காலத்திலே, மூங்கிலழகும் அணைபோன்ற மென்தோளும், வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடையவளோ, தாளத்தின் இடைக்காலத்தை உணர்த்துவதான தூக்கைத் தந்து நிற்பவள்? . கொலைக்குணமுடைய வேங்கையைக் கொன்று அதன் தோலை உடுத்திருப்பாய். கொன்றைமலர் மாலை தோள்களிலே கிடந்து புரளக், கையிலே தலையை ஏந்திக், காபாலம்’ என்ற கூத்தினை ஆடுவாய். அப்போது முல்லையரும்புகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/11&oldid=822001" இலிருந்து மீள்விக்கப்பட்டது