பக்கம்:பாலைக்கலி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - கலித்தொகை மூலமும் உரையும் அணிந்தது போன்ற முறுவலை உடையவள் தானோ நினக்குத் தாளத்தின் முதலான பாணி'யினைத் தருபவள்? என்று, அவ்விடத்திலே, நீ அழித்தல் தொழிலை நடத்தும் காலங்களிலே, பாணியும் தூக்கும் சீரும் என்ற தாள காலங்களை, மாட்சி பொருந்திய அணியுடையவளான உமாதேவியானவள் காத்துநிற்க, நீ ஆடுவாயோ? அம்மையின் அந்த அருட்செயலினாற் போலும், நீ நின் வெம்மையை ஒடுக்கி, ஒர் உருக்கொண்டு, அன்பற்ற பொருளான எமக்கும், வந்து பொருந்தி நின்றாய்? அதன் காரணத்தைக் கூறுவாயாக, பெருமானே! விளக்கம்: உலகை அழிக்கும் நின் உக்கிர நடனத்துக்குச் சக்தி துணை செய்யமாட்டாள் என்று குறிக்கவே, தருவாளோ? என்றனர். அல்லது, அவள் தருவாளோ? அதுதான் நீ எமக்கு அமர்ந்தனை போலும் எனவும் கொள்ளலாம். தாள காலத்தில், முதல் இடை கடை நிலையைக் குறிப்பன பாணி, தூக்கு, சீர் என்பன மூன்றும், கல்லால நீழலில் அந்தணர்க்கு நான்மறை உரைத்ததும், பகீரதனுக்காகச் சடையிலே கங்கையைத் தாங்கியதும் சிரித்து, முப்புரம் எரித்ததும், கூளிப்போர் என்ற உக்கிர நடனம் ஆடியதும், தேவர்களைக் காக்க நஞ்சுண்டு கழுத்திலே அடக்கியதும் ஆகிய பழைய வரலாறுகள் இதன்கண் சொல்லப்பட்டன. கொட்டி ஊழிக்காலக் கூத்தையும், பாண்டரங்கம் ரிதிபுரத்தை எரியச் செய்து அந்த நீற்றைப் பூசி (சுடலைப் பொடி) ஆடிய கூத்தையும், காபாலம் நான்முகன் செருக்கடக்க அவன் தலையைக் கையாற் கிள்ளி எடுத்து ஆடிய கூத்தையும் உணர்த்துவன. அனைத்தும் அழியும் ஊழிக்கூத்து முதலது: பிறர்க்குத் தீங்கு விளைத்தாரை ஒடுக்கியது இரண்டாவது; ஆணவம் மிக்கதனால், அதனை அழித்தது, மூன்றாவது, ஆறு அறி என்பதனை, ஆறங்கம் அறிந்த என்பர். பிரிவு நிகழ்கின்ற காலமோ வெம்மைமிகுந்த கோடைக் காலம். அவ் வெம்மையோடு, பிரிவின் வெம்மையும் சேர இல்வாழ்வே கருகிவிடும் நிலை ஏற்படுகின்றது. இந்நிலை மாற வேண்டுமானால், அவள் கூட்டுறவு எண்ணம், அவன் உள்ளத்திலே உறைக்க வேண்டும். அவள் நினைவு அவன்பால் எழ வேண்டும். அவள்பால் அவனுக்கு அன்பும் ஆர்வமும் பிறக்க வேண்டும். இந்தச் சிவசக்திக் கலப்பு நிலையையே, வெம்மையும் தண்மையும் இணையும் வாழ்வியல் நிலையையே, சிவனின் கோர தாண்டவமாகவும், அதனால் துடிப்புற்ற சக்தி அவனுக்குத் தன் நினைவு தோன்றவும், அருள் பிறக்கவும் தாளம் உணர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/12&oldid=822002" இலிருந்து மீள்விக்கப்பட்டது