பக்கம்:பாலைக்கலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் : கடவுள் வாழ்த்து 5 நிற்பதாகவும் கவிஞர் காட்டுகின்றார். சிவசக்தி உறவு’ சகல உயிரினங்களின் ஆண்பெண் உறவுக்கு மூலமாகும் என்ற கருத்தினையே, கலிங்கத்துப் பரணியிற் சயங்கொண்டாரும். நீ; ↔* @ 強 塌 啄 @ 強 發 發 புவன வாழ்க்கைச் செயல் வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப் புணர்ந்தவனைச் சிந்தை செய்வோம்" என்று கூறிப் போற்றுகின்றார். மூவகைச் சிவதாண்டவங்கள் இதிற் கூறப்பெறுகின்றன. கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்பவை அவை. ஆண்மையும் வெற்றியும் தோன்ற நிகழ்த்தும் இச் சிவ தாண்டங்களின்போது,ஒரு பாதியான சக்தி ஒதுங்கி நிற்பாள் என்பதும், அவள் கருணையால் சிவனது சினம் தணியும் என்பதும் தத்துவம். சொற்பொருள்: 2 தேறு தெளிந்த கரந்து மறைத்து. தீ மடுத்து - எரியூட்டி, 3. குறித்தல் - சிந்தனை செய்தல். 4. மாறாப் போர்-புறமுதுகிடாத போர்.5.படுபறை-ஒலிக்கும் பறை உருவம் பெயர்த்தல் ஒன்றாகக் காட்டிப், பின் அதை மறைத்து மறொன்றாக ஆதல், 8. மதுகை - ஆற்றல், 9. பண்டரங்கம் - பாண்டரங்கம் என்னும் கூத்து.13 முலை-முல்லை.இடைக்குறை. 17 ஆணம்இல் நேயம் இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/13&oldid=822003" இலிருந்து மீள்விக்கப்பட்டது