பக்கம்:பாலைக்கலி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கலித்தொகை மூலமும் உரையும் பாலைக் கலி 1. கவின் தொலைதல் அஞ்சினான்! ('பொருள் தேடும் நினைவால் தன் மனைவியைப் பிரிந்து செல்ல நினைத்தான் ஒருவன். அவன் மனைவியின் தோழி அதனை அறிந்தாள். 'அவன் செல்வதால் விளையும் பயனிலும் செல்லாதிருப்பதே சிறப்பானது என்று தெளிவுபடுத்தினாள். அவன் பயணத்தை நிறுத்துகின்றான். அச்செய்தியை, அவள் மகிழ்வுடன் அவன் மனைவியிடம் சென்று சொல்லுகிறாள்.) தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், மடங்கல் போல், சினை.இ, மாயம் செய் அவுணரைக் கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூளயிலும் உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், 5 சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில் ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர் ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை - மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று - ஐஇய! - 10 தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, மலை இறந்து செயல் சூழ்ந்த,பொருள் பொருள் ஆகுமோ - நிலைஇய கற்பினாள், நீ நீப் ன் வாழாதாள், முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை? 'இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, 15 கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள் புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை? 'இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - 20 வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை? என, இவள் புன் கண் கொண்டு இணையவும், பொருள்வயின் அகறல் அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று, 25 காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல் யாழ் வரைத் தங்கியாங்கு, தாழ்பு, நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/14&oldid=822004" இலிருந்து மீள்விக்கப்பட்டது