பக்கம்:பாலைக்கலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கலித்தொகை மூலமும் உரையும் என்று, நான் உன்பால் சொல்லும்படியாக, இங்கே இவள் துன்பத்தால் பொலிவுகெட்டு வருந்தவும், அதனைக் கருதாயாய், நீதான் பொருள் தேடிவருதலையே கருதி இவளைப் பிரிந்து போவது, அன்பின் செயலே அன்று.” என்று, நான் கூறினேன். கூறவும், அதனைக் கேட்ட அவன் துடி துடித்தான். குத்துக்கோலாரின் ஏவலுக்கும் அடங்காது கட்டுமீறிச் செல்லும் கொடிய களிற்றுத் தலைவன், இனிய யாழ் ஒலி எழுதலைக் கேட்டதும் அமைதியுற்று நிற்பது போலத் தலைதாழ்த்தியும் நின்றான். நின் இயற்கை எழிலானது அழிந்துவிடுமோ என அஞ்சியே, நின் காதலன் என் சொல்லினைக் கேட்டு நின்னைப் பிரிந்து போகாது நின்றான். (ஆகலின், நின் கவலையை விட்டொழிப்பாயாக’ என்பது வேண்டுகோள்) விளக்கம்: ஈதல் இசைபட வாழ்தலே' என்றாலும், பிறருக்கு இரங்கி ஈவதாகச் சொல்பவன், தன் உயிர்த்துணையான மனைவிக்கு ஏற்படும் துயரினைக் கருத வேண்டாவோ என்று சொல்வது இது. இல்வாழ்விலே, நுகர்தற்குரியதான கட்டிளமைப் பருவத்திலே, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரியாது வாழ்தல் ஒன்றே பிற செல்வத்திலும் புகழினும் சிறந்ததாகும் என்ற நெறியை வற்புறுத்துவது இதுவாகும். - "பொருள் பொருளாகுமோ என்பதனுள் முதலது செல்வம்: இரண்டாமது பொருள் பொதிந்த அறமுறை. சொற்பொருள்: 1. தொடங்கற்கண் - உலகத் தோற்றக் காலத்தில், முதியவன் - முன்தோன்றியதால் முதியவனான நான்முகன். 2 அடங்காதார் - பகைவர். மிடல் - வலி (ஆற்றல்) 3. மடங்கல் - எமன். அவுணர் - அரக்கர். 4. கடந்து அடு முன்பு - எதிர் நின்று அழிகின்ற ஆற்றல் மூவெயில் இரும்பு, பொன் வெள்ளியால் ஆகிய மூன்று கோட்டைகள், 5. உடன்றக்கால் - சினந்து நோக்கிய பொழுது. ஒண்கதிர் - தீயைக்கக்கும் ஞாயிறு. தெறுதலின் சுடுவதால், கணிச்சியோன் - மழுவேந்திய சிவன் 7. ஏறுபெற்று அழிந்து வரை மலை. 8.அழல்அவிர் ஆரிடை - அழல்வீசும் செல்லுதற்கு அரியவழி.10, இறப்ப-பொருள் கருதிப் பிரிய. 12, இறந்து கடந்து. 16. கல் - மலைநாடு. 18. புல்லாகம் - புல்லுதற்கு இனிய மார்பு. 20. கடன் - காடுசேர்ந்த நிலம். 21. வடமீன் - அருந்ததி, வயங்கிய பிறரால் போற்றுதற்குரிய, 22. தடமென்தோள் - பெரிய மென்மையான தோள். 24. புன்கண் - துன்பம். இணையவும் வருந்தவும். 26. காழ்வரை - குத்துக் கோலாரின் ஆணையின் கருத்துக்கு. கடுங்களிற்று ஒருத்தல் மதம் மிக்க யானைத் தலைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/16&oldid=822006" இலிருந்து மீள்விக்கப்பட்டது