பக்கம்:பாலைக்கலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 9 2. கானம் தடுத்துவிடும்! (தன் மனைவியைப் பிரிந்து பொருள் தேடுதற்குச் செல்ல நினைத்தான் தலைவன் ஒருவன். அதனால், அவன் மனைவி துயரடைவாள் என்று அறிந்தாள் தோழி. அவனிடம் பலவாறு கூறி, அவனைப் போகவிடாது தடுத்து நிறுத்த முயன்றாள். அவனோ பிடிவாதமாகவே இருந்தான். அப்போது அவள் தலைவனிடத்தே சொல்லுகின்றதுபோல அமைந்த செய்யுள் இது) அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் - இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க, பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் - விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி: 5 'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின் என, பல இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை, கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை, - அடையொடு வாடிய அணி மலர் - தகைப்பன. 'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள் என, 10 ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய்ஆயினை, செல்லு நீள் ஆற்றிடை, சேர்ந்து எழுந்த மரம் வாட, புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி - தகைப்பன. பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள் என, பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை, 15 துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து அணி செல, வாடிய அம் தளிர் - தகைப்பன. என ஆங்கு - யாம் நிற் கூறவும் எம கொள்ளாய் ஆயினை, ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி, 2O மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ சொல்லும் கானம் - தகைப்ப, செலவு. 'சிறிதேனும் அறம் என்பது இல்லாமல், பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாரும் பழித்துப் பேசுவரே என்று நாணத்தால் குன்றிப் போவாள். மிகவும் வருத்தப்பட்டு நீ கடந்து செல்லும் பாதை மிகவும் நீண்டதாயிற்றே என நினைந்து ஏங்குவாள். அதனால், வளைகள் முன் கையில் பிடிப்பாயிராது தளர்ந்து ஒடும். கண்களிலே பெருகும் கண்ணிர் இமைகளை நனைக்கும். பொறுக்க இயலாத காமநோயினால் இவள் நெற்றியின் ஒளியும் கெடும். இவளுடைய சிறந்த இன்பத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/17&oldid=822007" இலிருந்து மீள்விக்கப்பட்டது