பக்கம்:பாலைக்கலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கலித்தொகை மூலமும் உரையும் இழந்தாயினும் செயல்மேற் செல்வேன்' என்று நீ விரும்புகின்றாய். ஆதலின், நான் சொல்வதைக் கேட்பாயாக 'உன்னுடையவளான இவள், நீ பிரிந்தால் உயிரோடு வாழமாட்டாள்’ என்று, பலவாறாகச் சொல்லிச்சொல்லி வேண்டினோம். எம் வார்த்தைகளை ஏற்காதவனாக நீயும் ஆகி விட்டனை. நீ கடந்து செல்லும் வழியிலே, நீர் வற்றிப்போன வறண்ட சுனையானது, தழையோடும் சேர்ந்து வாடிய அழகிய மலர்போல நிலம் பொரிந்து, வறண்டு கிடக்கும். 'நீ பிரிந்தால், வகையுற அமைந்த இவளது உடல் எழில் விரைவிலே வாடிவிடுமே என்று உனக்கும் பொருந்துமாறு பலவும் சொல்லி வேண்டினோம். நீயோ அதனை உணர்ந்து அருள் செய்யாதவனாயினாய். நீ செல்லும் நீண்ட வழியின் இடையிலே பற்றுக்கோடாகச் சேர்ந்து படர்ந்த மரமானது பட்டுப்போக அதனை விட்டுக் கீழே விழுந்து வாடிக்கிடக்கும் பூங்கொடிகளைக் காண்பாய். இவளோடு கொண்ட நெருக்கத்தை நீ விடத் துணிந்தால் இவள் இறந்து விடுவாளே எனப் பணிந்துவந்து வேண்டினோம். அதனை ஏற்காது, போவதற்கு வேண்டிய பலவற்றையும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றாய். அங்ங்னம் துணிந்து நீ செல்லும்போது, அவ்வழியிலே, முன்னர் நீ கண்ட அழகிய மரமும் அழகுகெட்டு, அதன் அழகிய தளிரும் வாடிக் கிடக்கவே காண்பாய்.” யாம் பலவாறு நின்னிடம் இவ்வாறு எல்லாம் வெதும்பிக் கூறிய எம் வார்த்தைகளுக்கு நீ செவிசாய்க்கவில்லை. நினக்கு மேலாக நின்று உண்மைகளை விளக்கிக் கூறுவரே நின் உறவினர்; அவர்போல வாட்டமுற்ற இவள் நிலையில் பிறர் அருள் செய்யக் கூடியவாறு உனக்குப் பலவும் காட்டி, நீ செல்லும் காட்டுவழியே நின் போக்கைத் தடுத்துவிடும்! கருத்து: நீர் வற்றிய சுனையும், தழையோடு வாடிய மலரும், தளர்ந்து வீழ்ந்து கிடக்கும் கொடியும், மரத்தின் கண் வாடிய தளிரும் ஆகிய இவையேனும் நினக்கு இவளது வாடிய நிலை போலக் காட்டி, நின்னை வீடு திரும்பச் செய்யும் என்பதாம். சொற்பொருள்: 1. அயல் - அயலவர். அம்பல் - ஒருவரைப் பழித்து மெதுவாகக் கூறிக் கொள்ளுதல். 2. வறன் - வறட்சி. 3. இறை - முன்கை, 4. புல் என்ற அழகு இழந்த 5 விறல் நலன் - பேரழகு. 6. உடை இவள் - உயிராக உன்னை உடைய இவள். 7. எம - யாம் கூறியனவற்றை. 8. கடை இய செலுத்திய. 11. ஒல்லாங்கு - பொருந்தும் வகையில் உணர்ந்தீயாய் - உணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/18&oldid=822008" இலிருந்து மீள்விக்கப்பட்டது