பக்கம்:பாலைக்கலி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 17 நெடுந்தகையே! இவ்வாறு நீர் செல்வது நுமக்குத் தகுதியன்று. அன்பற்று எம்மை வாட்டமுறச் செய்வன ஏதும் செய்யாதீர். அவ்வழியிலே, நும்மோடு எம்மையும் உடன் அழைத்துச் செல்வீராக, நாம் சேர்ந்திருக்க, அத்துன்பமே வந்து சேர்ந்தாலும், சேர்ந்திருக்கும் அது வல்லாது இன்பமும் எனக்கு வேறு உண்டோ? கூறுக. கருத்து: "துன்பம் துணையாக உம்மோடு நாடின் என்றது, இணைந்து செல்லும் அந்த இன்பத்தின் முன் துன்பமும் பொறுத்தற்கு எளிதேயாகும் என்ற தலைவியின் உள்ளப்பண்பை உணர்த்துகின்றது. சொற்பொருள்: மரை ஆ காட்டுப் பசு மரல் - கற்றாழை. 2. வரை - மலை. சுரம் - காடு, 3. சுரை அம்பு - சுரையோடு கூடிய அம்புகள். மூழ்க அழுந்த சுருங்க உடல் தளர்ந்து. புரையோர் - குற்றமே புரியும் கொடிய ஆறலைகள்வர்.4.உள்நீர்-வயிற்றகத்து நீர். புலர்வாடும் - நீர் வேட்கை மிக்க வறட்சிகொண்ட 7. என்நீர் - என்நீர்மை, பிரிந்து உயிர் வாழா என் இயல்பு. நின்நீர நின் இயல்பிற்கு ஏற்ற, 9. அன்பு அறச் சூழாது அன்பு அறும்படி விட்டுப் பிரிதலைக் கருதாது. 10. நாடின் - உடன் கொண்டு செல்வதை நினைப்பின், - 6. பொருள் உயிர் தருமோ? (ஏதோ பொருள் தேடி வருவேன் என்றிரே, அப்பொருளால் என்னதான் நன்மையோ? பொருளோடு நீர் திரும்பி வரும்போது, அதற்குள் போய்விடும் இவள் உயிரை மீட்டுத் தரும் சக்தியும் அதற்கு உளதாமோ?’ என்று கேட்கிறாள் தோழி. ஆகவே, போக்கை நிறுத்துக' என்பது அவள் வேண்டுகோள்) வேனில் உழந்த வறிது உயங்கு ஒய் களிறு வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று உசாவுகோ - ஐய! - சிறிது? நீயே, செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து, யாழ நின் 5 கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே, இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல், மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே. நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி, புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே; 10 இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல், இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/25&oldid=822015" இலிருந்து மீள்விக்கப்பட்டது