பக்கம்:பாலைக்கலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கலித்தொகை மூலமும் உரையும் அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? என ஆங்கு - நச்சல் கூடாது, பெரும! இச் செலவு ஒழிதல் வேண்டுவல், சூழின், பழி இன்று; 20 மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி, தன் நகர் விழையக் கூடின், இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே. ஐயனே! காக்கும் கடமை பூண்ட மன்னன், அந்தப் பொறுப்பிலிருந்து தான் மாறுபட்டனனாயின் நாடு என்னவாகும்? மேலும், பண்பற்ற ஒருவனின் சொல்லுக்கு இணங்கித் தீமையும் விளைத்து வந்தால், மக்கள் எவ்வளவு துயரடைவர்? அத்தகைய மன்னவனின் கொடுங்கோலாட்சி போலக் கதிரவனின் கதிர்கள் அனலினை ஏவி உலகை வெம்மையால் வாட்டுகின்றன. காட்டிலுள்ள யானைகள், முன்னர் மதங்கொண்டு திரிவன; அம் மதநீரில் வண்டுகள் மொய்த்து விளங்கும். இப்பொழுதோ, அவை தம் அழகு கெட்டனவாய், ஈரப்பசையற்ற நிலத்திலே உழுங் கலப்பை போலத் தம் கொம்புகளைத் தரையில் ஊன்றியவாகக், கையை உயரே நிமிர்த்தவாறு, சோர்ந்து வீழ்ந்து கிடக்கின்றன. வெற்றியையுடைய மலைகளும் வேனலால் வெதும்பியுள்ளன. போவதற்கு அருமையான அவ்வழியினைக் கடந்து சென்று, பொருள் தேட எண்ணினாய். எம்மிடம் சொல்லாது போகத் துணிந்த உனக்கு, ஒரு பொருள் உடைய செய்தியையும் சொல்ல நினைக்கிறேன். அதனையும் கேட்பாயாக: விரல்களால் வாசிக்கப்பட்டு ஒலிக்கும் நரம்பு ஏழும் கொண்ட யாழில் இசையானது, அதனை அனுபவிப்பார்க்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளாகும். இடையிலே ஒரு நரம்பு அறுந்துவிட்டாலும், அவ்வினிமை அதனின்றும் கிடைக்குமோ? அத்தகைய யாழினும் காட்டில் நிலையில்லாதது நீ தேடிச் செல்லும் பொருள். அதனை நீயும் விரும்பலாகுமோ? செல்வம் நிலையில்லாத ஒரு பொருள். வந்து சேருங் காலத்து அதனைக் கொண்டாரைப் பெரிதும் இன்புறச் செய்யும். போகும் போதிலோ, அவர் தம்மளவில் துயருறுவதுடன், பிறரானும் இகழ்ந்து பேசப்படும் துயரையும் செய்யும். இவ்வாறு, தனக்கு ஒரு பெருநிலையற்று, அடிக்கடி கைமாறிக் கொண்டிருப்பதான செல்வத்தை விரும்பி, நீயும் இவளைப் பிரிந்து செல்லலாகுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/28&oldid=822018" இலிருந்து மீள்விக்கப்பட்டது