பக்கம்:பாலைக்கலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Heš\yīš Čsêsši * ursdeoš seš] - 21 தவநெறிபோலக் குற்றமிலாது முயன்று புகழ்பெற வேண்டியதாயிற்றே அரசியல் பொறுப்பு’ என்றும் நோக்குவ திலர் தம் நன்மையைக் கருதுபவராயிற்றே என்ற அன்பும் இலர்; வரை துறையில்லாமல் அனைவரையும் தண்டிக்கும்போதில், எவருக்கும் இரக்கங் காட்டாது உயிர் வாங்குபவர், மன்னர். அவரினும், நிலையற்ற தன்மையுடையது அன்றோ பொருள். அதனையும் நீ விரும்பலாகுமோ? என, நான் சொல்லியதுபோல, நிலையற்றதான பொருளை விரும்புதல் கூடாது, பெருமானே! பிரிந்துபோகும் எண்ணத் தையே நீ ஒழித்துவிடல் வேண்டும். அவ்வாறு முடிவுசெய்வது பழிப்புக்கு உரியதும் அன்று. தன் மன்னவனாகிய ஆருயிர் மணாளன் காத்து நிற்க, வரும் விருந்தினைப் பேணித், தன் உள்ளம் விரும்புமாறு கூடிக்கலந்து இன்புறுதலே ஒரு மனையாட்டிக்குச் சிறப்பாகும். இனிதாகத் தழுவி மகிழும் அகன்ற மார்புடையவனே! நிலைபெற்ற பொருளும் அந்தக் காதலியின்பாற் பெறுகின்ற இல்லற இன்பமாகின்ற ஒன்றேயாகும் என்பதை அறிவாயாக! சொற்பொருள்: 1. நடுவு - நீதி. இகந்து கைவிட்டு ஒரீஇ - நீங்கி. நயன் அறம். வினைவாங்க - ஏவ. 2. ஒர்த்த விரும்பிய 3. சினம் வெப்பம். தெறுதல் சுடுதல் 4 உறல் - வண்டுகள் வந்து மொய்க்கும். ஒல்கிய தளர்ந்த 5. நாஞ்சில் - கலப்பை. 6 விறல் - வெற்றி, வெம்புதல் கருகிப் புகைதல். 7 இறப்ப கடந்து செல்ல. 9. வீழுநர் - விரும்புவார். இறைச்சி - இன்பம். கவர்பு - வாசிக்கப்பட்டு, கோல் - யாழின்கோல். 10. ஏழும் - நரம்புகள் ஏழும் 12. மரீஇ அடைந்து. 13. பீடு - பற்றுக்கோடு, புறமாறும் - நீங்கும். 14. திரு - நற்பேறு; அதாவது ஆகூழ் 15. புரை - உயர்வு. தவ மேன்மேலும் உயர. 15. செறுதல் - கோபித்தல். கண்ணோடல் - கருணை காட்டல், 20. சூழின் ஆராய்ந்து பார்க்கின். 21. புறந்தரல் - காத்தல். 22. தன்னகர் - தன்னவர். விழைய விரும்ப மனும்பொருள் - அழியாச் செல்வம். 8. தாயும் மகளும்! (ஒருவனை ஒருத்தி காதலித்தாள். பெற்றவரோ அவளை வேறொருவனுக்குத் தர விரும்பினர். அவள் அதனைத் தடுக்கச் செய்த முயற்சிகள் பலவும் பலன் தரவில்லை. அவள், தான் பிறந்த இடத்தை விட்டே அவளுடைய காதலனுடன், வெளியேறிச் சென்று விட்டாள். அவள் பிரிவினை, அவளை வளர்த்த செவிலித் தாயால் பொறுக்க முடியவில்லை. அவளைத் தேடிச் சென்றாள். இடைவழியிலே அந்தணர் சிலர் வந்தனர். அவர்களை அவள் கேட்பதும், அவர்கள் அவளுக்கு உரைத்த பதிலும் கூறுவது இது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/29&oldid=822019" இலிருந்து மீள்விக்கப்பட்டது