பக்கம்:பாலைக்கலி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 29 மிகக் கொஞ்சமாகக் கிடந்த நீரையும் கலக்கிவிடும். வேட்கை மிகுந்த களிறு அதற்கு ஒருபோதும் வருந்துவதில்லை. தன் வேட்கையை முதலில் தீர்க்கவும் அது முயல்வதில்லை. பிடியானைக்கு முதலில் நீர் ஊட்டிவிட்டுத் தான் அதன் பின்னரே எஞ்சிக் கிடப்பதை உண்ணும்' என்றும் அவன் சொன்னதை நீ கேட்டதில்லையோ? "இல்வாழும் இன்பத்தைவிட்டு நீங்கிச் சென்றவர் காதலர். இலைகள் காய்ந்து உதிர்ந்துபோகத், தாமும் பட்டு விட்டன மரங்கள். நிற்பதற்கும் நிழல் தராது அவரைத் துன்புறுத்தும் தகைமை உடையதாயிற்று அக்காடு” என்று அவன் சொன்னதை நினைந்து நீ கவலைப்படுகிறாய். ஆனாலும் "அக்காட்டினுள், தன்பால் அன்பு கொண்ட மடப்பெடையானது வெம்மைக்கு ஆற்றாது வருந்திய வருத்தத்தைத் தன் மென்மையான இறகுகளால் வீசியபடி, ஆண்புறா ஆற்றிக் கொண்டிருக்கவும் காணலாம்’ என்று, அவர் தாமே சொன்னதையும் நீ கேட்டாயல்லவோ? "மலை முகட்டிலே மூங்கில்கள் வாடி வறண்டு போயின. அவ்வளவு கொடிதாகக் கதிரவனின் கதிர்கள் தாக்கி வருத்தும் அக் காட்டுப் பாதை மிகவும் துன்பந்தருவதாயிற்றே?’’ என்றவரின் சொற்களைக் கேட்டு, நீ வருந்துகின்றாய். ஆனால், "அக்காட்டினுள், இனிமைதரும் நிழல் இல்லாததால் வருத்தங்கொண்ட தன் மடப்பிணைக்குத், தன் நிழலையே கொடுத்து, அன்புடன் கலைமான் பேணுவதும் உண்டு’ என்றனரே, அதனையும் நீ கேட்டாயில்லையோ? கொடுமையுடைய கானல் வழி தான் அது என்றாலும், அங்கு யானையும், புறாவும், மானும் தத்தம் காதலியரை அன்புடன் பேணக் காணும் நம் காதலர், புனைந்து போற்றும் அழகு கெடுமாறு நின்னையும் வாடச் செய்வாரோ? அதோ! வீட்டினுள்ளே பல்லியும் நான் சொல்வதை ஆமோதிப்பது போல ஒலி செய்கிறது; அதனையும் கேள். நின் இடக்கண்ணும் துடிக்கிறது; அதனையும் பார். மனந்தேறியிரு. ஆகவே, அவர் நம்மை நினைந்து விரைவில் திரும்பிவிடுவார்; நீ அது வரை ஆற்றியிருப்பாயாக' சொற்பொருள்: 2. பேணார் - பேணாதார்; காப்பாற்றாதார். தெறுதல் - அழித்தல். 3. புரிவு அமர் - உள்ளம் ஒன்றுபட்ட 5. வலிப்பல் - உறுதியாகக் கூறுவேன். 8. துடிஅடி துடி போலும் அடி கயந்தலை - யானைக்கன்று. சின்னிர் - சிறிதளவான நீர். 10. இகந்து நீங்கி, ஒரீஇ நீங்கி தீந்த தீய்ந்து உலர்ந்த உலவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/37&oldid=822028" இலிருந்து மீள்விக்கப்பட்டது