பக்கம்:பாலைக்கலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கலித்தொகை மூலமும் உரையும் கொம்பு 12. அசைஇய வருந்திய 13. சிறகர் - சிறகு புறவு - புறா. 14. வேய் - மூங்கில், கனை கதிர் - ஞாயிற்றின் அடர்ந்த கதிர்கள். 15. துன்அரும் தகைய செல்வதற்கு அருமையான தன்மை. துன்னுதல் - அடைதல். 16. இன்னிழல் - இனிய நிழல். பிணை பெண்மான். 17. கலை - ஆண்மான். 19 இனைநலம் - இத்தகைய தன்மைகள்.20. புனைநலம்-புனைந்து பண்ணிய அழகு. 21.பாங்கு ஒத்து இசைத்தன - என் சொல்லுக்கு இசைய ஒலித்தன. 11. போற்றாய் பெருமானே! ("இளைய நின் மனைவியைப் பிரிந்து பொருள் தேடச் செல்கிறாயே, இது தான் அடுக்குமா? வாழ்நாள்தான் நிலையானதோ? காலம்தான் காத்திருக்குமோ?’ என்று கூறித் தடுத்து நிறுத்துகிறாள், அந்த மனைவியின் தோழி, ஒரு தலைவனை.) இடு முள் நெடு வேலி போல, கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி, உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு, 5 வெறி நிரை வேறாகச் சார்ச்சாரல் ஓடி, நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் - சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்! உரனுடை உள்ளத்தை செய் பொருள் முற்றிய 10 வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்! இளமையும் காமமும் நின் பாணி நில்லா - இடை முலைக் கோதை குழைய முயங்கும் முறை நாள்கழிதல் உறாஅமைக் காண்டை - கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை. 15 போற்றாய் - பெரும! நீ, காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு, பொருள்வயிற் போகுவாய்! கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு மாற்றுமைக் கொண்ட வழி. கூடி மகிழ்ந்திருந்த அந்த இன்பநேரத்திலே, ஒரு நாள், சிறுபொழுது தூங்குவதுபோலக் கிடந்தாய். நம் வருகைக்குக் காத்திருக்கும் அன்புக் கணவன் கவலையற்றுத் துரங்குகிறானே? அவன் எண்ணம் மாறிவிட்டதோ?’ என்று, அவள் அதனை நோக்கிப் பயந்து விட்டாள். அதனால் விழித்த நீ, அவளை ஏற்று மகிழ்வித்தாய். ஆனாலும், அவள் அச்சம் தெளியவில்லை. அத்தகைய கலந்த ஈடுபாடுள்ளவள் நின் மனைவி. அவளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/38&oldid=822029" இலிருந்து மீள்விக்கப்பட்டது