பக்கம்:பாலைக்கலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HeSg$i& Gsólss... * பாலைக் கலி 31 தவிக்க விட்டுவிட்டுப் பொருள்தேடப் போகின்றாயே! நீ நெஞ்சிலே மிகவும் உரம் உள்ளவனேதான்! இன்பவாழ்வை விட்டு, நீ செல்லும் பாலைவழியை நினைத்தாலோ, அம்மம்மா, நெஞ்சமும் நடுங்குகின்றதே! கொலைகாரர்கள், வில்லிலே அம்பினைப் பூட்டி எய்து வழியே போவாரைக் கொல்வர். செத்தவரின் பிணங்களைச் செத்தைகளாலும் சுள்ளிகளாலும் மூடிவைத்துப் பிறர் காணாதபடியே மறைப்பர். அப்படி மறைத்த குவியல்கள், முள்வேலி இட்டதுபோலப் பாதையின் எப்புறத்தும் காணப்படும். அத்தகைய கொடுமைகள் நிறைந்த பாதை அது. நீர் அற்றுப்போன சுனைகளை ஒவ்வொன்றாகச் சென்று சென்று பார்த்தும் நீர் காணாது, வறிதாகச் சோர்ந்து, நீர் வேட்கை கொண்ட தம் உடல்களும் வாடி இளைத்து விட்டன காட்டு யானைகள். ஒரு சுனையில் மிகச் சிறிது தண்ணிரைக் காணவும், அவை ஆவலோடு சென்று கையிட்டன. நீரின் வெம்மையோ துதிக்கையைச் சுட்டது. இவ்வாறு, யானைகள் பலவும் தம் நிரைகளைப் பிரிந்து, நீர் வேட்கைதாளாது, வேறு வேறாகப் பிரிந்து, இச் சாரலிலே ஒடி ஒடி அலைவதால், பாதைகள் எங்கணும் அவற்றின் தடங்கள் படிந்து தோன்றும் முறையான பாதை எதுவென அறிய முடியாத மயக்கமும் எவருக்கும் ஏற்படும்! தொலையாத பெருவழியாகவும் அது தோன்றும்! தொல்லை மிகுந்த அவ்வழியிலே சென்று திரும்பி வருபவனான நீ என்னதான் சொல்லப் போகின்றாய்? "பார்த்தீர்களா! செய்ய நினைத்த செயலை முடித்தேன். அதன் பயனால் யான் பெற்ற பெருவளன் இவை - இப்பொருள்கள் - என்று சொல்வாய். ஆனால், அதற்குள், நீ முதன்மையான பலவற்றையும் அடியோடு மறந்துவிட்டாய். நீ சென்று பொருள் தேடி வருவதற்குள், உன் இளமையும் காமவிருப்பும் உன்னிடமிருந்து மறைந்து போகும். அதனால், இவளைக் கூடி இவளுடைய இடையும் முலையும் கோதையும் குழையத் தழுவி மகிழும் முறையான இன்ப நாட்களும் வீணே கழிந்துபோகும். அப்படிப் போகாத வகை துறைகளைக் காண்பாயாக! வாழ்நாளின் கடைசி நாள் இதுவே என்று திட்டமாக அறிந்தவரோ எவருமில்லை. அதனால், இடையே நாட்களை வறிதே கழியாமல், இவளுடன் வாழும் இன்பவாழ்வைப் போற்றி இணைந்து மேற்கொள்வாயாக! பெருமானே! நீயோ, காம இச்சை பின்னாற் செல்லவும், கூற்றமும் முப்பும் உள்வென்ற உண்மையை மறந்தவரோடு ஒன்றாகக் கூடிப் பொருள்தேடிப் போக எண்ணுகின்றாய். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/39&oldid=822030" இலிருந்து மீள்விக்கப்பட்டது