பக்கம்:பாலைக்கலி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கலித்தொகை மூலமும் உரையும் இல்லறத்தாரான நன் மக்கள் செல்லும் வழியன்று அறநெறிக்கு மாறுபட்ட தன்மையைக் கொண்ட தவறான வழியே அது என்பதை ஏன் மறந்தாயோ! கருத்து: 'முறையான சுகவாழ்வுப் பாதையை விட்டுப் பொருளாசையால் மனைவியைப் பிரிய நினைக்கிறாயே?’ எனக் கண்டித்துப் பேசும் பாணி, மிகவும் சிந்தனைக்குரியதாகும். விளக்கம்: நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே (தொல். பொருள். 44) என்பதனால், தலைவன் முன் ஒரு காலத்தே கூறியவற்றினைத் தோழி தலைவனுக்கு எடுத்துக் கூறிச் செலவினைத் தடுத்தனள் என்று பொருள் கொள்ளல் பொருந்தும். சொற்பொருள்: 2. கொடுமரம் - கொடிய வில் தேய்த்தார் - கொல்லப்பட்டவர். பதுக்கை - பிணக் குவியலை மறைக்கும் இலைக்குவியல். 3. கடுநவை கொடிய குற்றம். ஆர் - நிறைந்த, அறுசுனை - வறண்ட சுனை. முற்றி - சூழ நின்று. 5. கடும்தாம் பதிபாங்கு - விரைவாகப் பதித்தவிடத்து. தெறப்பட்டு - சுடப்பட்டு, 7. நெறி மயக்குற்ற - பாதைகள் மயக்கம் விளைக்க, 14 கழிதல் உறாஅமைக் காண்டை - பயனின்றிக் கழியாதவாறு பார்த்துக்கொள். 15. கடைநாள் - வாழ்க்கையின் இறுதி நாள். 16 புகர்பட குற்றம்பட 18 ஒராஅங்கு ஒருபடிப்பட அஃதாவது முற்றவும்! 12. நகையாடச் சொன்னானடி! ('தன் மனைவியின் உள்ளத்திலே கலவரத்தைக் கிளப்பி விட வேண்டும். அவள், அதனால் நடுங்கித் துயரடைவது கண்டு மகிழ வேண்டும்’ என்ற வினோதமான எண்ணம் ஒருவனுக்கு. தான் அவளை விட்டுப் பிரிந்து போவதாகச் சொல்லுகிறான். அவளோ, 'உன்னுடன் நானும் வருவேன்' என்கிறாள். காட்டுவழியின் இடர்ப்பாடுகளை அவன் கூறுகின்றான். அவளது மென்மையையும் எடுத்துக் காட்டுகின்றான். பதில் பேச அறியாது தலைவி பதறுகிறாள். அங்கே அப்போது வந்த தோழி உண்மை தெரிந்தவள். வேடிக்கை செய்கிறானடி இவன் என்று விளக்குகிறாள்.) செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல, எரி மேய்ந்த கரி வறல்வாய், புகவு காணாவாய், பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான், திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட, மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, 5 உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/40&oldid=822032" இலிருந்து மீள்விக்கப்பட்டது