பக்கம்:பாலைக்கலி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 39 மாசற்றவனாகி வருவேன் என்கின்றாயே, நின் புதிய அந்தத் தெளிவும், இவள் அழகை மீட்டுத் தர வல்லதாகுமோ? முறுக்கவிழ்ந்து மணம்வீசும் நீலமலர் போன்றன, மையுண்ட இவள் கண்கள். நீ பிரிந்தால் அழுது, எரிகின்ற திரியிலிருந்து சொட்டும் நெய்போலக் கொதிப்புடைய கண்ணிர்த் துளிகளையும் அவை சொரியுமே! இவளோடு நீ கொண்ட காதற் பிணைப்பை அறுத்துவிட்டுச் சென்று, நீ வேற்றுநாட்டில் கொள்ளும் புதிய வாணிகத் தொடர்புகள், அந்தக் கண்ணொளியினை மீட்டுத்தர வல்லவோ? எனவே, இவற்றையெல்லாம் நன்றாக உணர்ந்து, நீ செய்ய வேண்டுவதை ஆராய்ந்து முடிவுக்கு வருவாயாக வளமையோ எந்நாளும் இங்கிருந்தும் செய்துகொள்ளக் கூடியதே யாகும். ஆனால், இவள் இளமை - முளை வரிசை போன்ற பல் வரிசையுடைய கன்னியரின் கூட்டத்திலே, அழகியாள் எனத் தேர்ந்தெடுத்த சிறப்புடைய இளமை - அழிந்து போயின பின்னர், எதுவும் அதனை மீளவும் தருவதற்கு இயலாது என்பதனை, நீயும் அறிவாயாக கருத்து: போகும் வழியோ கொள்ளையர் நிறைந்தது. பதனமாக நீ திரும்பிப் பொருளுடன் வருவது அரிது. இவள் அழகும் கெடும். எனவே போகாமல் இருந்துவிடு என்று உரைத்தாள் தோழி. அகவாழ்வுதான் புறவாழ்வான பொருள், கல்வி, தொடர்பு ஆகியவற்றினும் சிறந்தது எனக்கூறும் இப் பாடலின் நயம் காண்க. செல்வ நிலையாமை இளமை நிலையாமை போன்றவும் இதன்கண் வற்புறுத்தப் பெற்றன. சொற்பொருள்: 1. அரிமான் - சிங்கம். சிலை வில் செய்யும் மரம்.2. புரிநாண் முறுக்குண்ட நாண் கயிறு, 5. எருத்து - கழுத்து. எறுழ் நோக்கு வலிய பார்வை. இரலை - கலைமான். 6. மருப்பு - கொம்பு மறிந்து-முறுக்குண்டு. 7 உருத்த கொடிய.9. புறமாறிய - இல்லாமற் போன, 12 செயலை - அசோகு, 13 நீர் - இயல்பு. 14 புரையோர் - உயர்ந்தோர், படர்ந்து - சென்று வழிபட்டு. 15. படிவம் - ஒழுக்கநெறி. 18. பின்னிய தொடர்பு - அன்பால் பிணைத்த தொடர்பு 23. அனையவை கூறியவற்றை. நினைஇயன நினைந்து தேடுவன. 24. வளமை - செல்வம் முதலாயின. 26, இறந்த பின் கழிந்த பின். 15. தெய்வத்தை வணங்கலாமோ? (காதலன் பிரிந்து சென்றுவிட்டான். அவன் கொடிதான பாதையிலே நடந்து செல்லும் நினைவுகள் அவன் மனைவிக்கு மனத்தில் எழுகின்றன. பாதையின் கடுமைபற்றிக் கேட்டிருந்த அவள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/47&oldid=822039" இலிருந்து மீள்விக்கப்பட்டது