பக்கம்:பாலைக்கலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கலித்தொகை மூலமும் உரையும் அதனால் கவலையுற்றாள். தோழியை அழைத்து, அவர்க்குத் தீங்கு நேராதவாறு நாம் இந்திரனையும், கதிரவனையும், காற்றுத் தேவனையும் வழிபட்டு வணங்குவோமா?’ என்கிறாள். அதற்கு அவள், 'உன் கற்பின் ஆற்றலே துன்பங்களை விலக்கிவிடும் என்று ஆறுதல் கூறுகிறாள். கற்பு மகளிர் பிற தெய்வங்களைத் தொழுதலையும் வேண்டுவதிலர் என்பது இதனால் உணரப்படும்.) பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க, வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர, ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர்திறத்து, இனி நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன்? அதுவும்தான். தொல் நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து, உள்ளார், 5 துன்னி, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை, 'கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு' என, இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ? புனையிழாய் ஈங்கு நாம் புலம்புற, பொருள் வெஃகி, முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை, 10 'சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக' என, கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ? ஒளியிழாய்! ஈங்கு நாம் துயர் கூர, பொருள்வயின், அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை, 'முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக" என, 15 வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ? என ஆங்கு, செய் பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார்மாட்டு, இனையன தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் - தேமொழி! - 'வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் 20 நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு என, அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினைத் திறத்தே. தூக்கம் கொள்ளவில்லை. கண்கள் பசந்தன. வருத்தம் கண்ணிராக நிறைகின்றது. வளைகள் முன் கையினின்றும் கழன்று வீழ்கின்றன. இவ்வாறு, எழில் வாடும் என் அழிவுக்கு அஞ்சாது துணிந்து பிரிந்து சென்றார் அவர். அவரைப் பற்றிய சார்பிலே இப்பொழுது செய்யலாமோ வென்ற நினைப்பு ஒன்றும் உள்ளவளாயிருக்கின்றேன். அது என்ன தெரியுமா? முன்னர் நமக்கிருந்த நலம் முழுதும் தொலைந்தவராக, யாம் இங்கே தனித்திருந்து துயரத்தால் கலங்கவும், அவர் நம்மைப் பிரிந்து சென்று விட்டார். பொருளாசை கொண்ட நம் காதலர் <

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/48&oldid=822040" இலிருந்து மீள்விக்கப்பட்டது