பக்கம்:பாலைக்கலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - கலித்தொகை மூலமும் உரையும் துயர்கூர துயர்மிக, 14 அளிஒரீஇ - அன்பைக் கைவிட்டு 16, வளிதரும் செல்வன் - காற்றுக் கடவுள். 19. தெருமரல் - மனங்கவலற்க. 20. வறன் - மழைபெறா வறுமை. ஒடின் சென்றுபரவின் வான் - மழை, 22 அறன் - அறக்கடவுள். ஒடி விரைந்துசென்று பரவி. விலங்கின்று காட்டின் கொடுமைகளை விலக்கிற்று. 16. மருத்துவன் தந்த மருந்து! (பகைவர் பணிந்து வந்து திறையும் தந்தனர். அந் நாட்டைத் தானே நேரிற் சென்று காத்துப் பேணுதற்கு விரும்பினான் ஒரு தலைவன். அவன் கருத்தை அறிந்த அவன் தலைவி, அவனது பிரிவை நினைந்து மேனி வேறுபட்டவளாயினள். அதனைக் கண்டு, அவள் தோழி தலைவனிடம் செல்கின்றாள். பிரிவால் தலைவிக்கு மிகுதிப்படும் ஆற்றாமை நோயினையும், இளமையது அருமையினையும் எடுத்துக் கூறுகின்றாள். அவனும், பிரிந்து போகும் எண்ணத்தைக் கைவிடுகின்றான். அந்த நல்ல செய்தியைத், தலைவியிடம் மீளச் சென்று, தோழி இவ்வாறு உவகையோடு கூறுகின்றனள்.) படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணை புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும், 'உடையதை எவன் கொல்?' என்று ஊறு அளந்தவர்வயின் நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கற்காண் - நறுநுதால்! 'தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப, துறந்து நீ, 5 வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை, நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது, நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ? ஆற்றல் நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ, தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன்; முயல்வளவை, 10 நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக் கூற்று ஊழ் போல் குறைபடுஉம் வாழ்நாளும் நிலையுமோ? வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ, பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவை, தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின் 15 முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ? 6T6:I. ஆங்கு, பொருந்தி யான் தான் வேட்ட பொருள்வயின் நினைந்த சொல், திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல், மருந்து ஆகி, மனன் உவப்ப - பெரும் பெயர் மீளி - பெயர்ந்தனன் செலவே. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/50&oldid=822043" இலிருந்து மீள்விக்கப்பட்டது