பக்கம்:பாலைக்கலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலித்தொகை மூலமும் உரையும் சொற்களை அவனும் கேட்டனன். திருந்திய உடலுள் மருந்துவன் ஊட்டிய மருந்தைப் போல, என் சொற்கள் அவன் மன மாசுபோக்கும் நன் மருந்தாயின. நின் மனம் உவப்பால் களிக்குமாறு, பெரும் புகழ்பெற்ற நம் தலைவன், நின்னைப் பிரிந்து போகும் எண்ணத்தையே கை விட்டுவிட்டான். விளக்கம்: "முழு நிலவு தேய்ந்தால் மீண்டும் வளர்வது போல, இவள் அழகு வாடினால் மீண்டும் வளராது. முகையை மலரச் செய்யும் நாள், மீண்டும் அதனையே அழியச் செய்வது போல, இவளை மலரச் செய்த நீயே இவளுக்குக் கூற்றாயினையோ? மலர்ச்சி வாய்த்தது வண்டுக்குத் தேனூட்டி மகிழ என்றாலும், அதுவே மறுநாள் அதற்கு வாட்டமும் தருவது போல, உன்னோடு கூடிப்பெற்ற உறவுதானும் இப்போது அவளுக்கு அழிவைத் தருவதாயிற்றே?’ என்று தலைவனிடம் அறிவுறுத்துகிறாள் தோழி. சொற்பொருள்: 1. பாமாண்ட-பல்லாற்றானும் சிறப்புடைய, 2.புடை-ஒரு புறமாக உயிர்த்தல்-பெருமூச்செறிதல்.நாடுகாவல். 6. வலித்தி - துணிந்தாய்.11 நளிபொய்கை - பெருமை பொருந்திய குளம். அடை முதிர் முகை இலையினும் உயர்ந்த அரும்பு. 12. கூற்று - அழிவிற்கு காரணமாய அதன் மலர்ச்சி. 14. பயவினை - பயன்தரு தொழில் 16 தடம் - குளம் ஈண்டு அக்குளத்து நீர். 21. மீளி - பாலை நிலத் தலைவன். 17. ஒன்றினார் வாழ்க்கை! (ஒன்றாகக் கூடி இன்புற்று வாழ்வதே இல்லறத்தார்க்கு வாழ்க்கை நியதியாகும்; இளமை, நாள் கழியுந்தோறும் கழிந்துகொண்டே போவது. போன இளமையை மீட்டுத் தரும் சக்தியோ எதற்கும் கிடையாது. ஆகவே, இளமையில் இன்பத்தினை ஒன்றியிருந்து அநுபவித்து மகிழ்தல் வேண்டும். பிரிந்து சென்று, இளமையும் இன்பமும் கெடச் செய்வது தவறு. தலைவனுக்குத் தோழி இவ்வாறு இல்லற வாழ்க்கையின் இனிதான தத்துவத்தினை எடுத்துக் கூறுகின்றாள்.) அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப, பிரிந்து உறை சூழாதி - ஐய! - விரும்பி நீ, என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின் மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்; சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது; 5 ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்; - இளமையும் காமமும் ஒராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/52&oldid=822045" இலிருந்து மீள்விக்கப்பட்டது