பக்கம்:பாலைக்கலி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 45 ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும், 10 ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை, அரிதுஅரோ, சென்ற இளமை தரற்கு! அருமையான பொருள்களின்மேல் எழுந்த ஆசையால் உள்ளம் தலைவியின் மேலுள்ள பிணைப்பிலிருந்து நீங்க, அவளைப் பிரிந்து சென்று, வேற்றுநாடு போயிருப்பதைப் பற்றி நினையாதிருப்பாயாக, ஐயனே! என் தோளிலே நீ எழுதி மகிழ்ந்த தொய்யிலையும், நின் வலிய மார்பிலே தழுவுதலால் நான் பெற்ற தேமலையும் நினைத்தாவது, உண்மையைக் காண்பாயாக. போனவர்கள் அப்படியே அள்ளிக் கொண்டு வந்துவிடப் பொருளும் ஓரிடத்திலே குவிந்து கிடப்பதில்லை. அப்படிப் போய்ப் பொருள் தேடாதிருப்பவர்கள் எல்லாரும் சோற்றுக்கு வகையின்றி அழிந்து விடுவதும் இல்லை. இளமைப் பருவமும், இருவர் உள்ளத்திலும் காமவிருப்பமும் ஒன்றாகப் பெற்றவர்கள். சாதாரணப் பொருட்செல்வத்தை எங்கேனும் விரும்புவார்களோ? அத்தகைய, அதனினும் சிறந்த, நன்மை எதுவும் செல்வத்தினிடம் இல்லவும் இல்லை. இவை இரண்டும் உள்ள நாள்வரையும் ஒருவரையொருவர் தம்முள் தழுவியும், ஒவ்வொரு சமயம் ஒரு துண்டு ஆடையே உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும், அதனைப்பற்றிக் கவலையுறாது, ஒன்றிக் கலந்து வாழ்பவரின் வாழ்க்கையே சிறந்த இன்ப வாழ்க்கையாகும். சென்றுபோன இளமையை மீட்டுத் தருவது என்பது எவர்க்கும் அரிதானதல்லவோ?. கருத்து: பெண்மை, எப்பொருளினும் இன்பத்திலும் தன் காதலனுடன் கூடிப்பெறும் காதலின்பம் ஒன்றையே சிறப்பாகக் கருதும் இயல்புடையது. அதற்கு வேறெதன் மேலும் அத்துணைப் பாசமும் பற்றும் உண்டாவதில்லை. இத் தத்துவம் நன்றாக விளக்கப்படுகிறது, இப் பாடலில் சொற்பொருள்: 1. துரப்ப - வலிந்து துரத்த 3. யாழ:அசை 4. மார்பில் சுணங்கு - காதலன் அணைப்பால் காதலி மார்பிற் றோன்றும் தேமல், 8. வளமை விழைதக்கது - செல்வத்திடத்து விரும்பத்தக்கதொரு சிறப்பு 10. ஒன்றன்கூறாடை ஒர் ஆடையை இரண்டாக்கிப் பெற்ற ஒரு பகுதி. 11. ஒன்றினார் - உள்ளத்தால் ஒன்றுபட்டுக் கலந்தவர். என்தோள் (5), என்றது, தலைவி தோளைத் தன் தோளாகவே கொண்டு உரிமையால் ஒன்று போலப் படைத்துக் கூறியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/53&oldid=822046" இலிருந்து மீள்விக்கப்பட்டது