பக்கம்:பாலைக்கலி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கலித்தொகை மூலமும் உரையும் 18. நீயும் ஓர் ஆண்மகனோ? (எம்மைப் பிரிந்து போகத் துணிந்து விட்டாய். நீயோர் நல்ல ஆண்மகனே அல்லை. ஒன்று செய். போன இடத்திலிருந்து, இங்கிருந்து உனக்குப் பின் வருபவரிடம், 'என் மனைவி எப்படியிருக்கிறாள்?’ என்று மட்டும் கேட்க வேண்டாம். கேட்டால், உன் பொருள் முயற்சியும் அங்கே கெட்டுவிடக் கூடும். இவ்வாறு கூறி, அவனை மாற்ற முயல்கிறாள் தோழி) செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம் பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? - ஐய! - அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து, பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்; 5 மகன் அல்லை மன்ற, இனி. செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி, அன்பு அற மாறி, "யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை என் திறம் யாதும் வினவல்; வினவின், 10 பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய, தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு. ஐயனே செவ்வையான சொற்கள், இனிதான பேச்சுக்கள் எல்லாம் பேசி, அவற்றோடும் அமையாது பையத்தழுவித் தழுவி மகிழ்ந்தாயே, அப்போது அவையெல்லாம் பொய்யாகப் போகும் என்பதை யாம் எங்ங்னம் அறிவோம்? உள்ளம் அமைதிகொள்ளாதவாறு வாட்டத்தை எமக்குத் தந்துவிட்டுக், கதிரவன் சினங்கொண்டு எரிக்கும் கொடிய பாலைநிலத்தைப் பற்றிய சிந்தனையில் நீ ஈடுபட்டிருப்பதை இப்போது அறிந்து விட்டேன். இனியும், உன்னை ஓர் ஆண்மகன்’ என்று என்னால் நம்பமுடியவில்லை. எப்படியாவது போய்ச்சேர். போய், நீ செய்யும் காரியத்தையும் செவ்வனே முடித்துக்கொள். 'அன்பில்லாது மாறியவனாக, இங்கே வர நினைந்து, 'யான் கைவிட்டுவந்த என் தலைவியது நிலைமையை நீவீர் அறிவீர்களோ? என்று மட்டும், இங்கிருந்து அங்கு வருபவர் யாரையும், இவள் நிலைமை குறித்து எதுவுமே நீ கேட்க வேண்டாம்! கேட்டால், கதிரவன்போல விளங்கும் நின் தலைமை சிதையுமாறும், செய்தற்கு அரிதாகச் செய்யமுயன்ற காரியம் முடியாது போமாறும், அங்கோர் இடையூறு நிகழ்தலும் நினக்கு உண்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/54&oldid=822047" இலிருந்து மீள்விக்கப்பட்டது