பக்கம்:பாலைக்கலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 47 விளக்கம்: நீ பிரிந்தால் இவள் இறந்துவிடுவாள்' என்று சொல்லாது, போன இடத்தில் இவளைப் பற்றிக் கேளாதே; கேட்டால், இவளின் சாவைத்தான் அவர்கள் சொல்வார்கள். அப்போது, உன்னாலும் பொறுத்திருக்க முடியாது. உன் தகுதியும் செயலும் கெட்டாலும் கெட்டுவிடும்’ என்று வாதாடுகிறாள் தோழி. இதுவும், தோழி தலைவியது நிலையைத் தன்னதாகவே உரிமையாற் கொண்டு உரைத்ததாகும். சொற்பொருள்: 1. செவ்விய செம்மையான முறையோடு கூடிய தீவிய இனிய.2. அஞ்ஞான்று - அக்காலத்தில்.4. அகனகர் - பெரிய ஊர். 8. அற நீங்கும்படி மாறி - மனம் வேறுபட்டு 10. என் திறம் - என்னைப் பற்றிய செய்தி. 12. தவல் அரும் - கேடு அடைதல் கூடாத 13. அவலம் - துன்பச் செய்தி. படுதல் - உண்டாதல். - 19. மான்கள் பிரியுமோ? (மனைவியைப் பிரிந்து, வேற்றுார் சென்று பொருள் தேடி வர நினைத்தான் ஒருவன். அவள், தானும் அவனுடன் வருவேன்' என்றாள். வழியின் வெம்மையையும் அவளது மென்மையையும் கூறி, அவள் மனத்தை மாற்ற முயன்றான். அவளோ, அங்குக் கலைமானும் அதன் பிணையும் பிரிந்தா வாழுகின்றன? ஒன்றாகச் சேர்ந்தே செல்வதைக் காணலாமே! அதனால், என்னையும் உன்னுடன் அழைத்துப் போனா லென்னவோ?’ என்கின்றாள்.) பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற, செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின், தணிவு இல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும் பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும் மணி திகழ் விறல் மலை வெம்ப, மண் பக, 5 துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ் சுரம் - "கிளி புரை கிளவியாய்! நின் அடிக்கு எளியவோ, தளி உறுபு அறியாவே, காடு? எனக் கூறுவீர்! வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து அளி என, உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ?10 'ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின், ஆறு நீர் இல' என, அறன் நோக்கிக் கூறுவீர்! யாறு நீர் கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும் தேறு நீர், உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ? "மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும் 15 மாண் நிழல் இல, ஆண்டை மரம் எனக் கூறுவீர்! நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/55&oldid=822048" இலிருந்து மீள்விக்கப்பட்டது