பக்கம்:பாலைக்கலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 51 காமதேவனைப் போன்றவனே எனினும் ஆம். 11:மருங்கில் - காரணமாக, பெயர்பு பெயர்பு - மீண்டு மீண்டு; மாறி மாறி, 13 இமைப்புவரை - இமைப்பளவும், 14 அமைக்கவின் மூங்கிலின் அழகை. 21. மொழிக்கண் தாவுதல்: (தலைவன் பிரிய முனைகிறான். அவன் களவுக்காலத்தே செய்தவும் சொன்னவும் கூறிப், பேச்சுமாறும் பண்புடையவன் நீயானால் நான்தான் யாது செய்வேன்?” என்று வாதாடுகிறாள் தோழி) உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல் பண்டும் இவ் உலகத்து இயற்கை, அஃது இன்றும் புதுவது அன்றே - புலனுடை - மாந்திர்! - தாஅய் உயிர் பெய்த பாவை போல, 5 நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால், ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை? நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின் 10 பறி முறை பாராட்டினையோ? - ஐய! நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல் செய்வினை பாராட்டினையோ? - ஐய! குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் 15 இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில் தளர் முலை பாராட்டினையோ - ஐய! என ஆங்கு, அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட சுடர் காய் சுரம் போகும் நூம்மை யாம் எங்கண் 2O படர் கூற நின்றதும் உண்டோ - தொடர் கூர, 喹 துவ்வாமை வந்தக்கடை? அறிவுடையீரே! ஒருவரிடம் சென்று, அவரைப் புகழ்ந்து அவர் போக்குப் போலப் பேசி, உணவுப் பொருளைக் கடனாகப் பெறுவதற்கு இரந்து வேண்டும்போது காட்டும் முகபாவமும், அப்படிப் பெற்ற கடனை அவர்க்குத் திரும்பவும் கொடுக்கும் போது காட்டும் முகபாவமும், மனிதர்களிடத்தில் வேறுபட்டுத் தோன்றல் என்பது, பண்டுதொட்டே இவ்வுலகத்தின் இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/59&oldid=822052" இலிருந்து மீள்விக்கப்பட்டது