பக்கம்:பாலைக்கலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கலித்தொகை மூலமும் உரையும் மலையோ, வெம்மையால் கொதிப்படைந்து, வழிநடந்து போவ தற்கும் அரிய வெம்மையான காணலாகவும் மாறி விட்டது. அதன் வழியே நீ மட்டும் தனியே போகவும், யான் இங்கே தனித்திருந்து வாடுதல் என்பது, ஊரவர் கண்டு நகைப்பதற்கே இடமாகும். இனி நான் உண்ணவும் மாட்டேன்; உயிர் வாழவும் மாட்டேன். கணவர்களால் தோள் நலம் உண்டு கைவிடப்பட்ட பெண்கள், நீரினை ஏந்தி உண்ட பின்னர் வீசி எறிந்துவிடும் பனங்குடைகளைப் போன்றவர்களாவர்! இன்பந்தருவாரால் வந்து கூடி நலன் உணப்பட்டுக் கை விடப்பட்ட பெண்கள், குடியிருப்போர் காலிசெய்து போன பின் விளங்கும், பாழ்பட்ட ஊருக்குச் சமானமாவார்கள்! மனம் விரும்பிக் கூடின தம் கணவரால் பெண்மையின் நாற்குணங்களையும் அனுபவித்துக் கைவிடப்பெற்ற பெண்கள், பூ முடித்திருந்தவர்கள் மறுநாள் வீசி எறியும் கழித்த பூவை ஒப்பவர்களாவார்கள்! அவர்போல, உன்னால் யானும் என்னளவில் அந்நிலையினளாகிவிட்டேன். கொன்றுபோடும் கொடிய எண்ணத்துடன் வேட்டை நாய்கள் சூழ்ந்து மடக்கத் தவித்த மானானது, வேடனின் வலையிலே சென்று வீழ்த்தாற்போல, உன் சொல்லாலும் செயலாலும் துன்புற்றுத் தவித்த என் நெஞ்சம், உன்னிடமே சென்று நிலைத்துவிட்டது. அதற்கு எத்துணைத் துன்பமும் நேராது காத்துக் கொள்வது இனி உன் பொறுப்பு, ஐயனே! - விளக்கம்: பயனடையும் முன்னர் கருத்தாகப் போற்றப்படும் பனங்குடையும், ஊரும்; மலரும், பின்னர் கவனிப்பாரற்றுக் கைவிடப்படுவதுபோல, எம்மையும் நலனுண்ட பின் கைவிட்டுச் செல்கின்றீரோ? என்று கேட்கும் சொற்கள் உருக்கந் தருவனவாயுள்ளன. வளமிகுந்த மலைச்சாரல் கதிர் வெம்மையால் பாழ்பட்டது போலத் தலைவியின் எழிலும் அவன் பிரிவால் பாழ்படும் என்பது கருத்து. சொற்பொருள்: 1. கைம்மா - கையை உடைய விலங்கு; யானை, உளம்புநர் - அடித்து ஒட்டுபவர். 8. வேணிர் உண்டோர் - வேட்கையால் நீர் உண்டோர். குடை - பனை ஓலையால் குடைபோல் செய்தபட்டை10.அல்குநர்-வாழ்வோர்.14ஆறாது - அடங்கி இராது. 16. அமர்ந்த விரும்பிய, 17. நின்னாங்கு - உன்னிடம் 18. கொண்மே - கொள்வாயாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/62&oldid=822056" இலிருந்து மீள்விக்கப்பட்டது