பக்கம்:பாலைக்கலி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 55 23. போயிற்றென்று சொல் (கணவனின் சொல்லிலும் செயலிலும் தலைவி புதுமை கண்டாள்; உண்மையை உணரமாட்டாதவளாகி வாடினாள். அந்நிலையில், அவன் உறங்கும் வேளையில், ஒரு நாள் கனவிலே, வேற்றுார் போவதுபற்றிப் புலம்புதலைக் கேட்டுவிட்டாள். வருந்திய அவள், தான் ஏதும் கூறாது, தன் தோழியிடம்,'அவரோடு என் உயிரும் போய்விடும் என்று சொல்லிவிடு' என்று, இப்படித் தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாள்.) 'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் அஞ்சியது ஆங்கே அணங்காகும் என்னும் சொல் - இன் தீம் கிளவியாய்! - வாய் மன்ற நின் கேள் புதுவது பல் நாளும் பாராட்ட, யானும், 'இது ஒன்று உடைத்து என எண்ணி, அது தேர, 5 மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள், பாயல் கொண்டு என் தோள் கனவுவார், ஆய் கோல் தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள், கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ - இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் 10 நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்று, செய் பொருள் முற்றும் அளவு? என்றார்; ஆயிழாய்! தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின், தொய்யில் துறந்தார் அவர் என, தம்வயின், 15 நொய்யார் நுவலும் பழிநிற்ப, தம்மொடு போயின்று சொல், என் உயிர். இனிதாகவும் சுவைபடவும் பேசும் என் தோழியே! நெஞ்சு நடுக்கமுறும்படி பல நாட்களாகக் கேட்டேன், ஒரு செய்தியை கடுமையான அச்செய்தி உண்மையோவெனவும் அஞ்சினேன். 'அச்சங்கொண்டால் அந்த அச்சமாகிய அதுவே அணங்காகி அவரை வருத்தும் என்ற சொல், மிகவும் உண்மைதான். நீயும் இதனைக் கேள்: பலநாளும் என்னைப் புனைந்து புனைந்து புதிதுபுதிதாகப் பாராட்டினார். யானும், இஃது ஏதோ ஒர் எண்ணத்தை கொண்டதுதான்’ என அது குறித்து எண்ணினேன். அது இப்போது தெளிவாய் விட்டது. மாசற்ற வண்மையான படுக்கையிலே என்னோடும் கூடிக்கலந்த வேளையில், என் தோளிலே சாய்த்நவாறே உறங்கினவர், கனவு கண்டு பிதற்றினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/63&oldid=822057" இலிருந்து மீள்விக்கப்பட்டது