பக்கம்:பாலைக்கலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கலித்தொகை மூலமும் உரையும் அருகே இருக்கும்போது சிறப்புச் செய்து, அவரைப் புகழ்ந்து போற்றி, அவர் புறத்தே போன அளவிலே அவரைப் பழித்துத் தூற்றும் புன்மையானவரின் தொடர்பு நீ அறிவாயன்றோ? அதேபோன்று, நீ அருகிருந்து கூடும்போது நீலமலர் போல விளங்கிச், சிறிது அளவில்தானே நீ பிரிந்தாலும் கலங்கிக் கண்ணிர் செரியும் கண்’ என்ற ஒர் உறுப்பும், நின் மனைவிக்கு இருக்கின்றது, அல்லவோ? செல்வம் உடையவராக ஒருவர் இருக்கும்போது, அவரோடு சேர்ந்து அவர் செல்வத்தைத் தாமும் அநுபவித்துப் பின் அவர் வறுமையுற அவரை ஏறிட்டும் பாராத உணர்வற்றவரின் தொடர்பு எத்தகையது? அதுபோலவே, இங்கே நீர் கூடியிருந்து அருள் செய்யும்போது, தானும் அழகு பெற்றுச் சிறந்து முன் கைகளிலே விளங்கிப், பின் ஒரு நாள் நீர் பிரிந்து போனதும், தோள் மெலியும்போது உடனிருந்து உதவாது, தான் கைவிட்டுக் கழன்று போய்விடும் நிலையுடைய வளையல்களும் அவள்பால் உளவன்றோ? ஒருவரோடு ஒருவர் நட்பாயிருக்கும் காலத்திலே, அவரது இரகசியமான செய்திகளை அறிந்துகொண்டு, பின்னர் இருவரும் பிரிந்த காலத்தில், அந்த இரகசியங்களைப் பிறருக்கு உரைத்து வெளிப்படுத்தும் பெருமையற்றோரின் தொடர்பு இழிந்ததன்றோ? அதுபோல, ஒரு நாள் நீர் வந்து அருளும் போது ஒளிபெற்றுச் சிறந்து, ஒருநாள் நீர் பாராட்டாத போது பசலைபாய்ந்து உம்மைத் தூற்றும் நுதல்’ எனவும் ஒன்று அவளுக்கு உண்டல்லவோ? உன் நிலையை ஊருக்குப் பறை சாற்ற அவை எல்லாம் இருக்கும்போது, யாம் உனக்குக் கூறுவதற்குத்தான் என்ன இருக்கிறது? எம்மினும் நீயே எல்லாம் நன்கு அறிந்தவன் ஆவாய். நெடுந்தகாய்! வானத்திலிருந்து மழை பெய்யாது போனால், இவ்வுலகம் என்னவாகும்? அதுபோலவே, நின் அருள்மழை இல்லாதபொழுது, இந்த ஆயிழையின் கவினும் கெட்டழிந்து விடும் அல்லவோ? இதனையேனும் நீ அறிந்து கொள்வாயாக! சொற்பொருள்: 6 முழங்கு அழல் - பேரோலியோடு எரியும் நெருப்பு.7. வளிமகன் - iமசேனன், வாயுபுத்திரன். 9. எழு உறழ் - தண்டாயுதத்தை ஒத்த 12. இறத்திரால் - இறத்திராயின் போவதானால். 13. மணக்குங்கால் சேர்ந்து வாழும் பொழுது. 14. தனக்குங்கால் - பிரியும்பொழுது 20. ஒல்கிடத்து - வறுமை உறறக்கால். உலப்பிலா - உதவாத 28. துளி - மழை. 29. அளி அன்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/66&oldid=822060" இலிருந்து மீள்விக்கப்பட்டது